வெளியீட்டு தேதி 28 ஜனவரி 2023

அன்பரே, ஆனந்தத்தால் நிரம்பியிரு 😀

வெளியீட்டு தேதி 28 ஜனவரி 2023

“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு."  (வேதாகமத்தில் சங்கீதம் 16:11 ஐ வாசிக்கவும்) 

பலர் மகிழ்ச்சிக்கான திறவுகோலையும், மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான அற்புத வழியையும் தேடுகிறார்கள். இன்னும், இது ஒரு வழிமுறையைப் பற்றியது அல்ல... அது இயேசு கிறிஸ்து என்ற நபரைப் பற்றியதாகும்!

அவரே நீ பின்பற்றும் வழியாகவும், நீ விசுவாசிக்கும் சத்தியமாகவும், உன்னை நிரப்ப விரும்பும் ஜீவனாகவும் இருக்கிறார்.

கர்த்தர் உன்னைத் தம்மாலேயே நிரப்புவதால், நீ அவருடைய ஞானத்தையும், பலத்தையும், தெளிவான பார்வையையும் பெறுகிறாய். எந்தச் சூழ்நிலையும் உன்னைத் தடை செய்யவோ அல்லது முன்னேறுவதைத் தடுக்கவோ முடியாது, ஏனென்றால் தேவனுடைய ஜீவன் உனக்குள் ஒரு வல்லமையுள்ள உந்துதலாக இருக்கிறது!

அவருடைய ஜீவன் உனக்கு வல்லமை அளிப்பது மட்டுமல்லாமல், உன் குடும்பம் மற்றும் சக ஊழியர்கள் மீதும், அவரது மகிழ்ச்சி உன் இருதயத்திலிருந்தும் நிரம்பி வழிகிறது.

அன்பரே, மகிழ்ச்சியுடன் வாழு… நீ ஜீவன் மற்றும் ஆசீர்வாதத்திற்கான வாய்க்காலாய் இருக்கிறாய்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: "ஆண்டவரே, என் மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்னவென்று எனக்குத் தெரியும், என் எதிர்காலம் முழுவதும் உமக்குள் மறைந்திருக்கிறது... இது எல்லாமே உம்மைப் பற்றியதுதான்! என்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களிடம் நான் ஆனந்தத்தில் பொங்கி வழியும் வகையில் இன்று என்னை நிரப்பி வல்லமை அளித்ததற்கு நன்றி! இயேசுவின் நாமத்தில், ஆமென்."

Eric Célérier
எழுத்தாளர்