அன்பரே, ராஜாதி ராஜா உன்னுடன் இருக்கிறார்!
“அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:23)
ராஜாக்களின் ராஜா, தேவர்களின் தேவன், இந்த உலகத்தை வெற்றிடத்திலிருந்து தனது வார்த்தையின் வல்லமையால் உருவாக்கினார். வானங்களைப் படைத்தவர் பூமிக்கு அடித்தளமிட்டார்.
இதே அசாதாரணமான கடவுள் ஒரு மனிதனாக பிறக்கவும், உன்னை நேசிக்கவும், உன்னைத் தம்முடைய பிள்ளையாக்கவும் தேர்வு செய்தார்!
உன் மீதான அவரது அன்பிற்கு எல்லையே இல்லை. உன்னுடன் நெருங்கிய தனிப்பட்ட முறையில் உறவாட அவருக்கு எல்லையில்லா விருப்பம் உண்டு. அன்பரே, உன் வாழ்க்கைக்கான அவரது கனவு நனவாகும் வரை உன்னை ஊக்கப்படுத்துவதும் உன்னுடன் பயணிப்பதும் அவருடைய விருப்பம். இதனால் தான் ஒவ்வொரு நொடியும்…
- அவர் உன்னை நேசிக்கிறார் (1 யோவான் 4:9)
- அவர் உனக்காக போராடுகிறார் (சங்கீதம் 35:1)
- அவர் உன் பக்கத்தில் இருக்கிறார் (எண்ணாகமம் 16:9)
- அவர் உன்னை ஆதரித்து உன்னைத் தாங்குகிறார். (சங்கீதம் 63:8)
அன்பரே, இந்த பாதையில் நீ தனியாக இல்லை. இம்மானுவேல் உன்னுடன் இருக்கிறார்!
ஜெபிப்போம்: “இம்மானுவேலரே, நீர் என்னுடன் இருப்பதற்க்காக நன்றி. என் வாழ்க்கைக்கான உம்முடைய கனவு நனவாகும் வரை நீர் என்னை ஊக்கப்படுத்தி என்னுடன் பயணிப்பதற்காக நன்றி. என்னை நீர் தனியாக விடாததற்க்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்."
