வெளியீட்டு தேதி 17 ஜனவரி 2023

அன்பரே, அவர் உன்னை அறிவார்…

வெளியீட்டு தேதி 17 ஜனவரி 2023

ஆண்டவர் உன்னை அறிவார்.  உண்மையிலேயே, அவர் உன் வாழ்க்கையின் அனைத்து விவரங்களையும், உன் இருதயத்தின் அனைத்து காரியங்களையும், நீ ஜீவித்திருப்பதின் மூலைமுடுக்கையும் அறிந்திருக்கிறார். எதுவும் அவருக்கு மறைவாக இல்லை.

உன்னை கவலையடையச் செய்யும் அல்லது ஒடுக்கும் எல்லா காரியங்களிலும் அவரை விசுவாசிக்க பயப்பட வேண்டாம். அவர் ஏற்கனவே அதை அறிந்திருக்கிறார், அது அவரை பயமுறுத்துவதில்லை - இதற்கு மாறான சூழ்நிலையிலும் அப்படியே விசுவாசி! உன்னுடன் சம்பாஷணை செய்யும்படிக்கு உன் பிரசன்னத்திற்காக பிதாவானவர் ஏங்குகிறார்.

உன் ஜெபத்தின் தருணங்களில், நீ அவரிடம் பேசுகிறாய் மற்றும் உன் வேதனை, சந்தோஷம், உன்னை வருத்தப்படுத்துவது மற்றும் உன்னை அலரச் செய்வது எது என்பதைக் கூட பகிர்ந்துகொள்கிறாய் என்பது உண்மைதான்... மேலும் தேவனை மகிமைப்படுத்துகிறாய்!

ஆனால் அன்பின் ராஜா உன்னுடன் பேச விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரை மகிழ்ச்சியடையச் செய்வதையும், அவருடைய திட்டங்களையும், உனக்கான திட்டங்களையும் அவர் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்!

தேவன் உன் பிதாவும் உன் சிநேகிதருமாய் இருக்கிறார். எனவே, ஒரு நிமிடம், மற்ற எல்லா சத்தங்களையும், ஆண்டவருடனான இந்த பாக்கியமான ஐக்கியத்திலிருந்து உன்னைத் திசைதிருப்பும் சத்தங்களையும் அமைதிப்படுத்து, அவருடைய சத்தத்தைக் கேள்.

இன்று, பரலோகம் திறக்கப்பட்டு உன் வாழ்க்கையைக் குறித்துப் பேசுகிறது. உன்னை நன்றாய் அறிந்த பிதாவானவர் தம்முடைய சமாதானத்தை உன் இருதயத்திலும், தம்முடைய மகிழ்ச்சியை உன் முழு உள்ளத்திற்குள்ளும் வரவழைக்கிறார்!

Eric Célérier
எழுத்தாளர்