• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
வெளியீட்டு தேதி 13 ஜூன் 2023

அன்பரே, சரித்திரம் மாறக் கூடும்!

வெளியீட்டு தேதி 13 ஜூன் 2023

அரசியல் அல்லது பொருளாதார துறைகளில் என்ன நடந்தாலும் சரி, இயேசு எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவராய் இருக்கிறார் என்பது உண்மை.

அவர் எப்பொழுதும் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து உயர்ந்த அதிகாரத்தை உடையவராய் இருக்கிறார்.

அவருடைய ஈடு இணையற்ற நாமத்தை ஜெபத்தில் பயன்படுத்த அவர் உனக்கு அனுமதியளிப்பதும், அதிலும் மேலாக, அப்படிச் செய்ய அழைப்புவிடுப்பதும் அவரது அளவற்ற அன்பே!

அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்போது...

  • சரித்திரம் மாறுகிறது...
  • வியாதியஸ்தர்கள் குணமாகிறார்கள்...
  • இருதயங்கள் ஆறுதல் அடைகின்றன...
  • வாழ்க்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன…

இயேசு தம்முடைய அதிகாரத்தை உனக்குக் கொடுத்திருப்பதால், உன் ஜெபங்கள் வல்லமை வாய்ந்த விளைவைக் கொண்டிருப்பதை உறுதியாக நம்பு!

அன்பரே, இயேசுவின் நாமத்தில் உன்னால் வரலாற்றின் சரித்திரத்தை மாற்ற முடியும் என்று நம்பு.

இன்று என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்: “இயேசுவே, உன்னதமான தேவனுடைய பிள்ளையாக, நான் என் அதிகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. நீர் ஜெபிக்கும்படி என் இருதயத்தில் வைத்த எல்லாவற்றிற்காகவும் நான் ஜெபிப்பேன். உம் நாமத்தால், வரலாற்றின் சரித்திரத்தைப் கூட மாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்! உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக.  ஆமென்!”

Eric Célérier
எழுத்தாளர்