• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu

ஒரு ஆன்லைன் ஆலோசகராக எங்களோடு இணைந்திடுங்கள்!

ஆன்லைன் உரையாடல்கள் மூலம் மற்றவர்களின் ஆவிக்குரிய பயணத்தில் அவர்கள் வளர உதவ விரும்பும், ஆர்வம் மிக்க தன்னார்வலர்கள் இங்கு தேவை.

ஒரு ஆன்லைன்-ஆலோசகராக, எங்களது இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளும் மக்களுடன் நீங்கள் உரையாடுவீர்கள். பலர் நம்பிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள், வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார்கள் அல்லது இயேசுவைப் பின்பற்றுவதன் அர்த்தம் என்ன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆண்டவரிடம் ஒப்புவிக்க முடிவு செய்யலாம்; மற்றவர்கள் சந்தேகங்கள் அல்லது வேதனைகளுடன் போராடிக்கொண்டிருக்கலாம். நீங்கள் பதிலளிக்கும் ஒவ்வொரு செய்தியும் கிறிஸ்துவின் அன்பைக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

நீங்கள் ஒருவருக்கு ஆன்லைன் பாடத்தின் மூலம் வழிகாட்டினாலும், அவர்களுக்காக ஜெபித்தாலும் அல்லது ஒரு சிறிய உரையாடலை மேற்கொண்டாலும்—உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

தொடங்குவதற்கு தயாரா?

நீங்கள் ஆலோசகராக செயல்படுவதற்கு தேவையான அடிப்படைப் பயிற்சியை நாங்கள் வழங்குவோம். நீங்கள் ஒருபோதும் தனியாக செயல்பட போவதில்லை—உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் எழும்போது ஆதரவளிக்க எங்கள் குழு எப்போதும் தயாராக இருக்கும்.

ஆன்லைன் ஊழியத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அழைப்பை நீங்கள் உணர்ந்தால், உங்களிடமிருந்து தொடர்பை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!

கீழே உள்ள படிவத்தின் மூலம் பதிவு செய்யுங்கள் அல்லது உங்கள் கேள்விகளை ecoach.in@jesus.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

டிஜிட்டல் உலகில் ஒளியையும் நம்பிக்கையையும் கொண்டு வர உங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்!