• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 30 அக்டோபர் 2024

அசைக்க முடியாத ஒரு நங்கூரம் உனக்கு உண்டு...⚓️

வெளியீட்டு தேதி 30 அக்டோபர் 2024

டைட்டானிக் அளவிலான கப்பலையோ அல்லது கடல் வழித்தடத்தின் நங்கூரத்தையோ நீ  எப்போதாவது பார்த்திருக்கிறாயா? இது மிகவும் சுவாரசியமான ஒன்று! இது போன்ற நங்கூரங்கள் மிகப்பெரியது, ஒருவர் மீது ஒருவராக அநேகர் நின்றால் கிடைக்கும் உயரத்தை விட மிகவும் உயரமானவை. உதாரணமாக, டைட்டானிக்கின் முக்கிய நங்கூரம் 15 டன்களுக்கும் அதிகமான எடைகொண்டது! ஒரு கப்பலின் நங்கூரம் வீசப்படுமாயின், அந்தக் கப்பலை வேறு எதுவும் நகர்த்த முடியாது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நங்கூரத்தைப் பற்றி வேதாகமத்தில் ஒரு வசனம் இவ்வாறு நமக்குச் சொல்கிறது: “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப்போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” (எபிரெயர் 6:19

இந்த நம்பிக்கை எனும் நங்கூரம், 

  • உன்னை ஒருபோதும் கைவிடாது
  • எப்படிப்பட்ட புயலாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள உனக்கு உதவும்
  • அசைக்க முடியாத அளவுக்கு உன்னை ஸ்திரமாக நிற்கச் செய்யும் நம்பிக்கை இது.
  • இது எந்தவொரு பூமிக்குரிய ஆதரவையும் விட மிகவும் உறுதியானது. 

ஒரு புயல் தாக்கும்போது, முதலில் நாம் பயந்து, தப்பித்துக்கொள்ள வழி தேடி எல்லா திசைகளையும் நோக்கி ஓடுவோம், பின் அதிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவுதான் என்று அறிந்துகொள்வோம். இருப்பினும், இந்த "உறுதியான மற்றும் ஸ்திரமான" நங்கூரத்திற்குள் ஒளிந்துகொண்டால், நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்போம்.

அன்பரே, உன் வாழ்க்கையில் பலத்த காற்று வீசுகிறதா?  இயேசுவைப் பிடித்துக்கொள். 

புயலின் மத்தியில் அசையாமல் நிலைநிற்கச் செய்யும் திடமான நங்கூரம் கர்த்தர் ஒருவரே ஆவார். அவர் உன்னைப் பாதுகாத்து ஆதரிக்கிறார். அவர் ஒருவரால் மட்டுமே தமது மகத்தான கிருபையினாலும் அளவற்ற அன்பினாலும் உன்னை உறுதியான நபராக மாற்ற முடியும். காற்று நன்றாக வீசலாம். ஆனால் இயேசு என்னும் நங்கூரம், பார்வையில் இருக்கும்வரை எதுவும் உன்னை சுலபமாய் கவிழ்த்து விட முடியாது.

நாம் சேர்ந்து ஜெபிப்போம்... “கர்த்தராகிய இயேசுவே, வாழ்வின் கொடிய காற்று என் இருதயத்தில் வீசி, என்னை நிலைகுலையச் செய்யும்போது, ​​நான் உம்மீது  நம்பிக்கை வைக்கிறேன். நீரே என் நங்கூரம், என் உறுதியான தங்குமிடம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே நான் இன்று உம்மைப் பற்றிக்கொள்கிறேன்; நான் இப்போதே உம்மிடம் திரும்புகிறேன். உம் அன்பு, உமது பிரசன்னம், உம் வார்த்தை, உம் ஆறுதலின் குரல் ஆகியவற்றால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்! நன்றி, ஆண்டவரே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.” 

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “சகோதரர் எரிக், உங்களிடமிருந்து நான் பெற்ற தினசரி தியானங்கள் மற்றும் ஜெபங்கள் பற்றிய அனைத்து மின்னஞ்சல்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றி சொல்கிறேன். ஒவ்வொன்றும் எனக்கு ஒரு ஆசீர்வாதமாக இருந்தது.

ஆண்டவர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறாரா என்ற கேள்விக்கான உங்கள் செய்தியைப் படித்தபோது, "கிறிஸ்மா, நீங்கள் என்னுடன் சேர்ந்து ஜெபிப்பீர்களா?" என்று நீங்கள் கூறிய வார்த்தையை என்னால் மறக்க முடியாது, உண்மையில் உங்களுடன் சேர்ந்து நான் ஜெபித்தேன். அந்த நேரத்தில் அந்த சிறு ஜெபத்தை நான் செய்தேன். ஏனென்றால் என் மருமகள் எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டினேன். இரவு 11 மணிக்கு மேல்  அவளைக் காணவில்லை. அவளுக்கு மூளையில் பிரச்சனை இருந்தது, சில சமயங்களில் அவள் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவாள். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல், அவளது அம்மா வீட்டிலிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவள் ஒரு சிறிய விபத்தை சந்தித்திருந்தாள்; ஆனால் பாதுகாப்போடு விட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள். ஆண்டவருக்கு நன்றி.” (கிறிஸ்மா)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.