• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 28 டிசம்பர் 2023

அதிசயத்தின் வல்லமை பற்றி உனக்குத் தெரியுமா?

வெளியீட்டு தேதி 28 டிசம்பர் 2023

என் நண்பனே/தோழியே, ஒரு கணம் உன் அன்றாட அவசர வேலைகளை நிறுத்திவைத்துவிட்டு, பரலோகத்தை நோக்கி உன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, ஆண்டவரது வாசஸ்தலத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சிந்திக்க உன்னை அழைக்கிறேன்.  பின்னர், உன்னைச் சுற்றியுள்ளவற்றின் மீது உன் பார்வையைத் திருப்பி, பூமி எவ்வாறு அவரது பரிபூரணத்தைப் பிரதிபலிக்கிறது என்பதையும், இயற்கையானது அவரது அழகையும் உணர்திறனையும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் கவனித்துப் பார்.

சங்கீதக்காரனும் ஒரு நாள், தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான், அவனுடைய உதடுகளிலிருந்து வெளிவந்து, பொங்கி வழிந்த துதி இதுவே... "தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; (சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது." (ஆபகூக் 3:3-4)  

என் நண்பனே/தோழியே, உனது பரபரப்பான வாழ்க்கையில், எல்லாவற்றையும் சற்று நிறுத்திவைத்துவிட்டு, உன்னைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் காரியங்களை மீண்டும் வியப்புடன் பார்ப்பது எப்படி என்பதை நீ அறிந்திருப்பாயானால் நலமாயிருக்கும்!

பாடும் பறவைகளின் மென்மையான சத்தம், உன் முகத்தின் மீது இதமாக வீசும் தென்றல் காற்று, புன்முறுவல் செய்யும் ஒரு சிறு குழந்தையின் முகம் என இப்படிப்பட்ட சின்னச்சின்ன விஷயங்கள்கூட நம்மை சந்தோஷப்படுத்துவதற்கும், ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்கும் நாம் இடமளிக்கும்போது, நம் வாழ்க்கை இனிமையாகிறது.

இன்று, இது உனக்கான ஒரு சவால்: முழுமனதோடு உன் வேலைகளை நிறுத்திவைத்துவிட்டு, உன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிக்க சற்று நேரம் ஒதுக்கு.  உன் சுவாசத்தை உள்ளிழு... பின் சுவாசத்தை வெளியே விடு... உனக்கு ஜீவ சுவாசத்தைக் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி சொல்லிவிட்டு, பிறகு இந்த நாளின் வேலைகளைத் தொடர்ந்து செய்.

நானும் இப்படியே செய்வேன்... இன்று என் ஜெபத்தில் உனக்காக ஜெபிக்கிறேன்!

Eric Célérier
எழுத்தாளர்