• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 22 நவம்பர் 2024

அன்பரே அமைதலாயிரு!

வெளியீட்டு தேதி 22 நவம்பர் 2024

இன்று முதல், இந்த வாரம் முழுவதும், மனஅழுத்தத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதைக் காண்போம். வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னேற முயற்சிக்கும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில் நாம் மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாகிறோம். குடும்பம், திருமணம், வேலை, போன்ற அனைத்து வகையான கடமைகளுக்கும் உட்பட்டு நாம் சில சமயங்களில் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறோம். நம்மையும் மீறி, இப்படிச் செயல்படும்படி நாம் இழுக்கப்படுவதால், ஆண்டவர் கொடுத்த சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துபோகிறோம்.

அன்பரே, சில சூழ்நிலைகளில் உன் சமாதானத்தை நீ இழந்துபோகிறாயா? இந்த முக்கியமான ஒரு கருத்தை கர்த்தர் உனக்கு நினைவூட்ட விரும்புகிறார்: "... அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் ..." (ஏசாயா 30:15)

எனது தோழியுடன் நான் கலந்துகொண்ட ஒரு நேரடி வீடியோ படப்பிடிப்பில், மனஅழுத்தத்தை சமாளிப்பதற்கான ஒரு எளிய வழிமுறையை அவள் எனக்கு வழங்கினாள். அந்த நுட்பம் தான் அமைதி. இது ஒரு நினைவில்கொள்ளவேண்டிய எளிதான நுட்பமே, அமைதி பற்றிய இந்த விளக்கத்துக்கு நான் நன்றி செல்கிறேன். 

  • அறிக்கையிடு: உன்னை நெருக்குகிற மக்கள் மற்றும் சூழ்நிலைகளை நினைக்கையில், ஆண்டவருடைய வார்த்தையையும், வாக்குத்தத்தத்தையும் அறிக்கையிடு. நீ வழக்கமாக அனுபவிக்கும் எல்லா மனஅழுத்தங்களையும் பட்டியலிட்ட பின்னர் அவைகளை மேற்கொள்ளும் வசனங்களை அதற்கு அருகில் எழுது.
  • ஏற்றுக்கொள்: சூழ்நிலையை ஏற்றுக்கொள். இதற்கு நீ அந்த சூழ்நிலையிலிருந்து விலகிவிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல; மாறாக அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். உன்னிடத்தில் உள்ளவைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்து, இன்னும் உன்னிடம் இல்லாதவைகளுடன் இணைந்திருக்காமல் உன்னிடம் உள்ள அனைத்திற்கும் ஆண்டவரிடம் நன்றி சொல்லு.
  • விட்டுவிடு: உன் காயங்களை மறந்து, காயப்படுத்தியவர்களை மன்னித்துவிடு; உன்னை உறுதியாய் பிடித்துக்கொண்டிருப்பவைகளை உதறித் தள்ளிவிடு.
  • தருணம்: இப்போதைய வாழ்வை வாழ்ந்துவிடு! வாழ்க்கை விலைமதிப்பற்றது, எனவே கடந்த காலத்திலேயே வாழாமலும், நாளைய தினம் பற்றிக் கவலைப்படாமலும் இரு. நித்தியத்தைப் பற்றிய பார்வையைப் பெற்றிரு. நாம் பூமியில் வாழ்ந்து கடந்து செல்கிறோம், அவ்வளவுதான்! ஆண்டவர் இன்று உன்னில் கிரியை செய்கிறார். குறிப்பாக, தம்முடன் நித்தியத்திற்கு உன்னை தயார்படுத்தும்படி, ஆண்டவர் உன்னில் இருக்கிற மனஅழுத்தங்கள் யாவும் மாறும்படி கிரியை செய்கிறார்!

அன்பரே, உனக்கு வெளிப்புற தாக்குதல்களால் மனஅழுத்தங்கள் இருக்கலாம், ஆனால் நீ அவற்றை உன் மனதுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை... ‌அவைகளைக் களைந்துவிடு!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்... “கர்த்தராகிய இயேசுவே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க எனக்கு நினைவூட்டியதற்கு நன்றி. மிகவும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக நான் உம்மிடத்தில் மன்னிப்பு கேட்கிறேன். இந்த நிமிடம் முதல் நான் உம்மை நம்புகிறேன்! ஆமென்.”

நீ மன அழுத்தத்தை வெல்ல முயலும் ஒவ்வொரு முறையும் இந்த நுட்பத்தைப் பயன்படுத்து!

ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.