நம்முடைய நோக்கங்களை நாம் அடிபணியச் செய்யாவிட்டால், ஆண்டவர் தருகிற பகுத்தறிவை நம்மால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாது

மிகப்பெரிய தீர்மானங்களை எடுக்க இருக்கும்போது, தீமையைத் தவிர்த்து நன்மையானதைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரும்பாலும் அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது. பெரும்பாலும், பல சிறந்த விருப்பத் தேர்வுகள் நமக்கு முன்பாக இருப்பதால், பகுத்தறிவது என்பது சவாலான ஒன்றாக நமக்கு இருக்கிறது. சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் ஒரு காரியத்தை நன்றாகக் கூறினார்:
“பகுத்தறிவு என்பது சரி மற்றும் தவறு ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுவது அல்ல; மாறாக அது மிகச்சரியான ஒன்றுக்கும் மற்றும் ஓரளவு சரியான ஒன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பகுத்தறிந்து சொல்வதாகும்."
ஆண்டவருடைய சித்தத்தை பகுத்தறிவதற்கான ஒரு சக்திவாய்ந்த தொடக்க நிலை அலட்சியப்போக்குக்காக ஜெபிப்பதாகும். பொதுவாக, அலட்சியம் என்பது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை; நாம் அதை அக்கறையின்மையுடன் ஒப்பிடுகிறோம். ஆனால் பகுத்தறியும் செயலில் இது அவசியம்.
இதன் அர்த்தம் என்னவென்றால், சரணடைதல் மற்றும் முடிவைப் பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கும் ஒரு நிலையை ஏற்றுக்கொள்ளுதல், ஆனாலும் ஆண்டவருடைய சித்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தல் என்பதாகும். இது சற்று சவாலானது; ஏனென்றால் நமது மனித சுபாவமானது நம் ஆசைகளைப் பற்றிப்போவதற்கும், ஒரு முடிவை மற்றொன்றுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதற்கும் நம்மைத் தூண்டுகிறது. அலட்சியம் என்பது உங்களது குறுகிய கண்ணோட்டத்தைத் தாண்டி அவருடைய சரியான தீர்ப்பை நம்புவதாகும்.
"தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்." (யோவான் 7:24)
ஆண்டவருக்கு நாம் எந்த அளவுக்கு இடமளிக்கிறோமோ அந்த அளவுக்கு மட்டுமே அவரால் நம்மை வழிநடத்த முடியும். நமது சொந்த நோக்கங்களை நாம் விட்டுவிடும்படி, அவரிடம் சரணடையாதவரை, நாம் அவர் அளிக்கும் பகுத்தறிவை தெளிவாக அடைய முடியாது.
மரியாளும் இயேசுவும் இப்படிப்பட்ட சரணடைதலை வெளிப்படுத்தும்படி இந்த ஜெபத்தை ஏறெடுத்தனர்:
"அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.” (லூக்கா 1:38)
“பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது." (லூக்கா 22:42)
அன்பரே, ஆண்டவருடைய சித்தத்தை நீங்கள் அறிய விரும்பும்போதெல்லாம் நீங்கள் ஜெபிக்கக்கூடிய ஜெபம் இதுதான்:
"பரலோகத் பிதாவே, என் வாழ்வில் உமது சித்தத்தைச் செய்வதைத் தவிர வேறு எதையும் நான் விரும்புவதில்லை.எனது எதிர்பார்ப்புகள், கனவுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் உமது கரங்களில் நான் ஒப்படைக்கிறேன்.பரிசுத்த ஆவியானவரே, ஆண்டவருடைய சித்தத்துக்கு மாறான எதற்கும் நான் அலட்சியமாக இருக்க உதவுவீராக,என் இதயத்தில் மறைந்திருக்கும் விருப்பங்களை எனக்கு வெளிப்படுத்துவீராக.ஆண்டவராகிய இயேசுவே,‘என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று சொல்வதற்கு உம்மைப்போல் என்னையும் தைரியமாக்கும்.இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

