• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 24 அக்டோபர் 2023

அன்பரே, அவருடைய கரங்கள் உனக்காக எப்போதும் திறந்திருக்கின்றன!

வெளியீட்டு தேதி 24 அக்டோபர் 2023

கெட்ட குமாரனின் உவமையானது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றும் எல்லோரையும் மிகவும் தொடக்கூடிய ஒன்றுமாக இருக்கிறது. அந்த மகன் தன் சொத்துக்களையெல்லாம் செலவழித்துவிட்டு, தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, அவனுடைய தகப்பன், தூரத்திலே  அவனைக் கண்டு, "மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்" என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது. (லூக்கா 15:20ல் வாசிக்கலாம்)

அன்பரே, நீ பார்த்தாயா? அந்தத் தகப்பன் தன் மகனைக் கடிந்துகொள்ளவே இல்லை! தன் மகனை‌ அவர் கடிந்துகொண்டிருக்க முடியும். அவர் தன் வீட்டு வாசலில் வந்து நின்று,  “ஏன் திரும்பி வந்தாய்? என்னிடம் இன்னும் அதிகமாகப் பணம் கேட்பதற்காக வந்தாயா? நான் கொடுத்ததை நீ என்ன செய்தாய்?" என்று அவனிடம் கேட்கத் தொடங்கி இருக்கலாம்.

அவர் அப்படிச் செய்யவில்லை. அந்தத் தகப்பன் அவனை கண்டிக்கவில்லை, அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் தன்னுடைய நாட்களில் காணப்பட்ட சமூக கட்டுப்பாடுகளை நினையாமல், தனது மேலங்கியைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டு, தன் குமாரனை நோக்கி  வேகமாக ஓடுகிறார்.

அவமானத்தையும் பழியையும் தன் மகனின் தோள்களின் மீது சுமத்துவதற்குப் பதிலாக, அவர் தன் குமாரன் மீது ஏராளமான அன்பைப் பொழிந்தார்!

என் நண்பனே/தோழியே, உன் பரலோகப் பிதா தனது இருகரத்தையும் நீட்டி உன்னை எப்போதும் வரவேற்கிறார். நீ பயமின்றி அவரிடம் வரலாம்... உன்னை  கண்டிக்கவோ, விமர்சிக்கவோ அல்லது கேள்வி கேட்கவோ, அவர் உனக்காக "வாசலில்" காத்துக்கொண்டிருக்கவில்லை. உன்னை நோக்கி ஓடி வருகிறார்! உதடுகளில் புன்னகையுடனும், கண்களில் கண்ணீருடனும், உன்னை மீண்டும் காணும் சந்தோஷத்தின் மிகுதியால் அவர் உன்னை நோக்கி ஓடி வருவதை உன்னால் பார்க்க முடிகிறதா? 

அன்பரே, நீ அவரால் மிகவும் நேசிக்கப்படுகிறாய்!

Eric Célérier
எழுத்தாளர்