• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 9 டிசம்பர் 2022

அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் நீங்கள் பிரவேசிக்க விரும்புகிறீர்களா?

வெளியீட்டு தேதி 9 டிசம்பர் 2022

தேவன் வாக்குப்பண்ணுகிறவர் என்பதையும், தாம் வாக்குப்பண்ணியதை காத்துக்கொள்ள உண்மையுள்ளவர் என்பதையும் இப்போது நாம் அறிந்திருக்கிறோம்; அவற்றை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்படி, அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

உங்களது கருத்தின்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடைய நிபந்தனைகள் ஏதேனும் இருக்கின்றனவா?

வேதாகமத்தில் “முன்நிபந்தனைகள்” அல்லது “அடைவதற்கான நிலைமைகள்” பற்றி குறிப்பிடப்படவில்லை.  உண்மையில், தேவன் எல்லா நபர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகிறவர். அதாவது, அவர் பட்சபாதமில்லாதவர் ... அவர் பாரபட்சம் காண்பிப்பதில்லை!  அவர் ஒருவனையும் புறக்கணி்ப்பதில்லை, அவர் உங்களையும் புறக்கணிக்க மாட்டார்!  (ரோமர் 2:11 ஐக் காண்க) 

மேலும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிற அனைவருக்கும் சொந்தமானது என்று வேதம் சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், சில குறிப்பிட்ட "விசுவாச வீரர்கள்” தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்த சூழ்நிலைகளை வார்த்தை குறிப்பிடுகிறது.  உதாரணமாக, சாராள்:

எபிரெயர் 11:11: “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்”. 

தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். உங்களது மிக அற்புதமான ஜெயத்தைப் பெற்றுக்கொள்ள, பெரும்பாலும் நீங்கள் அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில், அந்த விசுவாசம் மிகக் கடினமான சூழ்நிலைகளின் மறுபக்கத்தில் உள்ள வெகுமதியைக் காண்கிறது.

வாக்குத்தத்தமானது நிறைவேறக் காலதாமதமாகும்போது, பொறுமையாய்க் காத்திருத்தல் உங்களுக்கும் உதவும்…

எபிரெயர் 6:15: “அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்”.

சில நேரங்களில், வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு முன்பு, நீங்கள் நீண்ட காலம் காத்திருப்பீர்கள் ... ஆகவே, எல்லாவற்றையும் செய்யக்கூடியவர் மீதான உங்கள் விசுவாசத்தில், விடாப்பிடியாகவும் உறுதியுடனும் இருப்பது நல்லது.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களுக்கானது. நீங்கள் அடைந்துகொள்ளும்படி உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறது.  விட்டுவிடாதீர்கள்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.