• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 1 ஏப்ரல் 2023

அன்பரே, அவர் உனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்!

வெளியீட்டு தேதி 1 ஏப்ரல் 2023

“தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.” (ரோமர் 4:20-21)

ஆபிரகாம் சந்தேகிக்கவில்லை. தன்னைப் படைத்த கடவுள் தனக்கு ஒரு அற்புதத்தை செய்ய முடியும் என்று அவர் இறுதிவரை நம்பினார்: எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக... ஒரு குழந்தையை பெற்றெடுப்பது. அனைத்து மனித தர்க்கங்களுக்கும் எதிராக... ஒரு உயிர் உற்பத்தியாவது.

எல்லாம் தொலைந்து போனது போல் தோன்றும் போது...அதிசயம் நடக்கும்!

அன்பரே, ஆண்டவர் செய்வேன் என்று சொல்வதைச் செய்வார். அவர் உனக்கு உண்மையாக இருப்பதின் அளவு உன் சிரமங்கள் அளவை மிஞ்சும். உனக்காக அவர் வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்! நிச்சயமற்ற தன்மை உன் விசுவாசத்தைத் தடுக்கவோ அல்லது உன் மகிழ்ச்சியைத் திருடவோ அனுமதிக்காதே. உன் எதிர்காலம் ஆண்டவருடைய உள்ளங்கையில் வடிவம் பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆண்டவர் கிரியை செய்துகொண்டிருக்கிறார். அவர் உன்னை நேசிப்பதால் உன் சார்பாக கிரியை செய்துகொண்டிருக்கிறார். என் அன்பரே, ஆண்டவர் கிருபாவிற்கு செய்ததைப் போல, உனக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்.

"அனுதினமும் ஒரு அதிசயத்தை" நான் பெறத் தொடங்கியபோது, ​​என் கணவருடன் எனக்கு பிரச்சினைகள் இருந்தன. நான் புண்பட்டிருந்தேன், அவமானத்திலிருந்தேன், மேலும் பல எதிர்மறை எண்ணங்கள் இருந்தன. ஆனால் இந்த தினசரி செய்தியை நான் படிக்க ஆரம்பித்த நாள் முதல், என் விசுவாசம் புதுப்பிக்கப்பட்டது, எனக்கு நம்பிக்கை பிறந்தது, ஆண்டவரின் குரலுக்கு கீழ்ப்படிய கற்றுக்கொண்டேன். குணமாகும் பாதை திறந்துவைக்கப்பட்டது. இன்று, என்னால் மன்னிக்க முடிந்தது, ஆண்டவரின் அமைதி என் வீட்டில் இருக்கிறது. என் கணவரும் மிகவும் நல்ல முறையில் மாறிவிட்டார், நாங்கள் இருவரும் ஒருமித்து சிந்திப்பவர்களாக நடப்பவர்களாக இருக்கிறோம். பாஸ்டர் எரிக், ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. - Kiruba

ஒன்றாக ஜெபிப்போம்: "ஆண்டவரே, நான் சந்தேகிக்கமாட்டேன். என் கஷ்டங்களை காட்டிலும் நீர் மிகுந்த உண்மையுள்ளவராய் இருக்கிறீர். எனக்கு நீர் கொடுத்த வாக்குறுதிகளை நீர் நிறைவேற்றுவீர் என்று நான் விசுவாசிக்கிறேன். உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்."

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.