• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 ஜூன் 2023

அன்பரே, அவர் தன் சகோதரர்களால் நிராகரிக்கப்பட்டார்

வெளியீட்டு தேதி 11 ஜூன் 2023

இன்று, எனது நண்பராகிய ஒரு போதகர் எழுதிய இந்தப் பகுதியை வாசிக்கும்படி உன்னை அழைக்கிறேன். நான் இதை வாசித்தபோது, இது எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது, உன்னையும் இது ஆசீர்வதிக்கும் என்று நான் நம்புகிறேன்…

அலைக்கு எதிராக எதிர்நீச்சல் அடிப்பது எவ்வளவு கடினம்!  பெரும்பாலான ஜனங்கள் அவ்வாறு செய்வதை விரும்புவதில்லை... இது உலகப் பிரகாரமான வாழ்வில் மட்டுமல்ல, நமது கிறிஸ்தவ சகோதரர்கள் மத்தியிலும் இது யதார்த்தமான ஒன்றாக இருக்கிறது. யோசுவா, காலேப் மற்றும் மோசே ஆகியோர் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குச் செல்ல ஒரு படி மேல்நோக்கிச் செல்ல முடிவெடுப்பதன் மூலம் மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் எடுத்தனர். நிச்சயமாக, இது ஆபத்துக்களை உள்ளடக்கியதுதான், ஆனால் ஆண்டவர் அவர்களோடு கூட இருந்தார். பெரும்பாலானோர் அதைப் பற்றி எதுவும் அறிய விரும்பவில்லை, அதிலும் மோசமாக, அவர்கள் மீது கல்லெறியவும் கூட அவர்கள் விரும்பினர்.

வேதாகமத்தில் தலைவர்கள் பலர், விசுவாசிகளிடமிருந்து நிராகரிப்பை அனுபவித்தனர். பவுல் ஒரு பெரிய அப்போஸ்தலனாக மாறுவதற்கு முன்பு, கிறிஸ்துவின் மீது தனது சகோதரர்கள் கொண்டிருந்த விசுவாசக் குறைவின் நிமித்தமாக, பதினான்கு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தார். எகிப்தின் பிரதம மந்திரியாக ஆவதற்கு முன்பு யோசேப்பு தனது சகோதரர்களின் பொறாமையின் விளைவாக பதின்மூன்று வருட சோகத்தை அனுபவித்தான். இயேசுவைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர் ராஜாதி ராஜாவாக உயர்த்தப்படுவதற்கு முன் மூன்றரை ஆண்டுகள் நிராகரிக்கப்பட்டார்.

ஒரு நாள், நான் இந்த விசித்திரமான கதையை வாசித்தேன்: “விற்கப்பட இருந்த ஒரு மிகப்பெரிய பொருளை வாங்குவதற்காக சீக்கிரமாகவே வந்து காத்திருந்த பல வாடிக்கையாளர்கள் இன்னும் திறக்கப்படாத ஒரு பெரிய, மிகவும் பிரபலமான கடையின் அமைதியான நடைபாதையில் ஒரு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். ஒரு மனிதர் தோன்றி முழு வரிசையையும் கடந்து முன்னேறிச் சென்றார். அவர் முன் வாசலுக்குச் செல்வதற்கு முன், கூட்டத்தினர் அவரை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டு, அவரைப் பின்னுக்குத் தள்ளினர். நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக அடுத்தடுத்து நிகழ்ந்தன: அவருக்கு எதிராக பல எதிர்மறையான கருத்துக்கள் எழும்பின, அவரை விடாமல் அடித்துத் தாக்கினார்கள், நிலைமை மோசமடைந்து, குழப்பம் நிலவியது ... சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்த நபர் பல காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தற்செயலாக நடந்தது என்னவென்றால், விற்பனை செய்யும்படி கடையைத் திறக்க வந்த நபரையே ஜனங்கள் விரட்டியடித்திருந்தனர், அது மிகவும் அதிர்ச்சியான சம்பவமாக இருந்தது!"

பெரும்பாலும், விசுவாசிகள் புதிய கதவுகளைத் திறக்க வரும் அன்பானவர்களிடம் இதே போன்று நடந்துகொள்கிறார்கள். இயேசுதாமே இதற்கு மிகச்சிறந்த உதாரணமாய் இருக்கிறார்.

உங்கள் சொந்த சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்படுவதை விட ஆண்டவரை அறியாதவர்களால் நிராகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிதானது. இப்படிப்பட்ட நிராகரிப்பை அனுபவித்த அனைவரிடமும், “திடமனதாய் இருங்கள்!" என்று நான் சொல்ல விரும்புகிறேன். நிலைமை கடினமாக இருந்தாலும், ஆண்டவர் அதைத் தமது திட்டத்திற்காகப் பயன்படுத்துவார். கசப்பு உங்கள் ஆத்துமாவைக் கலங்கப்பண்ண விடாதீர்கள், மாறாக, ஆண்டவர் தம்மால் அழைக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்கிறார் என்று நம்புங்கள்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.