அன்பரே, ஆண்டவருக்கு ஊழியம் செய்ய உன் படைப்பாற்றலைப் பயன்படுத்து!
ஆண்டவர் உனக்கு ஒரு திறமையைக் கொடுத்திருந்தால், அவருடைய மகிமைக்காக அதைப் பயன்படுத்து!
ஏன் பயன்படுத்த வேண்டும் என்று உனக்குத் தெரியுமா? அவருக்கு உரிய கனத்தை நீ அவருக்கு வழங்க வேண்டும்.
உலகத்தை சிருஷ்டிப்பதில் ஆண்டவர் தாமே அசாதாரணமான விதத்தில் தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். சூரிய அஸ்தமனத்தையும் கண்கவரும் சமுத்திர அழகையும் ரசிக்காதவர்கள் யாராவது இருக்கக்கூடுமோ?
பழைய ஏற்பாட்டில், ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு ஆண்டவர் ஒரு ஆக்கப்பூர்வமான, திறமையான தொழிலாளியைத் தேர்ந்தெடுத்தார்: அவன்தான் பெசலெயேல். யாத்திராகமம் 31:1-5ல் நாம் அதை வாசிக்கிறோம். “பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.”
"நான் அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்" என்று ஆண்டவர் கூறுகிறார். அதாவது, இந்த அற்புதமான கலைத் திறமையை அவனுக்கு வழங்கியவர் நிச்சயமாக ஆண்டவர்தான்! அவரது குறிக்கோள் என்னவென்றால், நாம் அதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும். அவருடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக ஊழியம் செய்யவே அவர் நமக்குத் திறமைகளைக் கொடுக்கிறார்.
ஒவ்வொரு நபரும் அவன்/அவள் பெற்றுக்கொண்டதைக் கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய அவரது அழைப்புக்கு பதிலளிக்கும்போதுதான் நமது பரலோகப்பிதா மகிமைப்படுத்தப்படுகிறார்!
பாடுவது, ஆடுவது, இசைக்கருவி வாசிப்பது, பெயிண்ட் அடிப்பது, பின்னுவது, எழுதுவது போன்ற திறமைகள் உனக்கு உண்டா? உனது தாலந்து எதுவாக இருந்தாலும் சரி, ஆண்டவர் உன்னை எங்கு வைத்திருக்கிறாரோ, அங்கேயே அதைப் பயன்படுத்த நான் உன்னை ஊக்குவிக்கிறேன். உனது படைப்பாற்றல் எப்போதும் அவரை சந்தோஷப்படுத்துகிறது!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எனது குடும்பத்தினரிடமிருந்து பாராட்டையும் வரவேற்பையும் பெறுவதற்காகவே நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்பதையும், அது நடக்கவில்லை என்பதையும் நேற்றுதான் உணர்ந்தேன். நான் மதிக்கும் என் குடும்ப உறுப்பினரான ஒரு வயது முதிர்ந்த நபர், என் இளமை பருவத்தில், "நான் எதற்கும் பிரயோஜனப்பட மாட்டேன்" என்று என்னிடம் கூறினார். எனக்கு இப்போது 59 வயதாகிறது, இவ்வளவு காலமாக அந்தப் பொய்யை நம்பி வாழ்ந்து, பல வருடங்களை வீணடித்ததற்காக நான் வருந்துகிறேன். என் மீது எனக்கு கோபம் வந்தது, இறுதியாக நான் இயேசுவின் முழுமையான ஏற்றுக்கொள்ளுதலுக்கு என்னை அர்ப்பணித்தேன். என் வாழ்க்கையில் நான் நிறைவேற்றும்படி அவர் என்னை எதற்காக அழைத்தாரோ அதை நிறைவேற்ற நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்.
என்னிடம் பல படைப்பாற்றல் திறமைகள் உள்ளன, மேலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை நான் எப்போதும் விரும்புவேன். இப்போது என்னை முடக்கும் என் குடும்ப நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய வணிக முயற்சிகளைத் தொடர்வதோடு, வீடற்றவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அந்த முயற்சிகளில் சிலவற்றைப் பயன்படுத்துவேன். "அனுதினமும் ஒரு அதிசயம்" மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து உலகிற்கு ஆசீர்வாதமாக இருப்பீர்களாக.” (கேத்ரின்)
