அன்பரே, ஆண்டவருக்கு நுண்ணிய எழுத்துகளில் அச்சிடும் வழக்கம் உள்ளதா?
கற்பனை செய்து பார்... அதில் கருப்பு வெள்ளையில் எழுதப்பட்டுள்ளது, நீ உலகம் முழுவதும் செல்வதற்கான ஒரு அற்புதமான பயணச் சீட்டை வென்றிருக்கிறாய்... என்பதை நீ உறுதிப்படுத்திக்கொள்கிறாய்! அந்த பயணத்திற்கான நாள் வருகிறது, நீ உன் சாகசத்திற்குத் தயாராக உன் சிறந்த ஆடைகளை உடுத்திக்கொண்டு துறைமுகத்தை வந்தடைகிறாய், அங்கே.... உனக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது! நிறைவேற்ற வேண்டிய அனைத்து தகுதிகளையும் நீ பூர்த்தி செய்யாததால், நீ அதில் ஏற அனுமதிக்கப்படமாட்டாய் என்று ஒரு தொகுப்பாளினி கூறுகிறாள். கொஞ்சம் பொறு... என்ன தகுதிகள்? ஆவணத்தின் கீழே நுண்ணிய எழுத்தில் அச்சிடப்பட்டவையா? முடிவில், அந்த கடற்பயணம் உன் கைநழுவிப் போகிறது, அனுபவிக்க உனக்கு உரிமை இருந்ததாக நீ நினைத்ததை உன்னால் ஒருபோதும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது…
நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவிடமிருந்து, தொடுவானத்தில் ஒரு பயங்கரமான அதிர்ச்சி செய்தி ஒருபோதும் உனக்குக் காத்திருப்பதில்லை, நுண்ணிய எழுத்தில் அச்சிடப்பட்ட, ‘கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய தகுதிகள்’ என்பது அவரிடம் இல்லை. அவரது வாக்குத்தத்தங்கள் உறுதியானவை.
“ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.” (வேதாகமத்தில் 1 யோவான் 2:24-25ஐப் பார்க்கவும்)
கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் தெளிவானவை, உறுதியானவை, உண்மையானவை. தேவனுடனான நித்திய ஜீவனே உன் சுதந்தரவீதம்!
வார்த்தை மாம்சமாகிய கிறிஸ்துவால் இந்த வாக்குத்தத்தம் முத்திரையிடப்பட்டுள்ளது. அது உலகப் போக்குகளுக்கு ஏற்றவாறு மாறாத வார்த்தை, உத்தரவாதங்கள் எல்லாவற்றிலும் அது சிறந்த உத்தரவாதமளிப்பதாய் இருக்கிறது. அது மாறாததும், பூரணமானதும், நித்தியமானதுமாய் இருக்கிறது.
அன்பரே, நீ தேவனுடைய வார்த்தையை உன் இருதயத்திலும் எண்ணங்களிலும் எப்போதும் வைத்து, பாதுகாத்து நடக்கும் நபராக, உன்னதமானவரின் பிள்ளையாய் இருக்கிறாய். நித்திய ஜீவனுக்கான நிச்சயத்தை நீ பெற்றிருக்கிறாய்... நீ அந்த நிச்சயத்தைப் பெற்றிருக்கும்படி கிறிஸ்துவே அதை அறிவிக்கிறார்.
என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்: “கர்த்தாவே, உமது வார்த்தை பரிபூரணமானதும் மாறாததுமாய் இருப்பதற்காக நன்றி. நீர் வாக்குப்பண்ணியதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறீர். உம்முடன் வாழும்படி நித்திய ஜீவனுக்கான அழகான வாக்குத்தத்தத்தை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கிறேன்! உம் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
சாட்சி: “தினமும் உங்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்காக நன்றி. அவை எனக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை என்று எனக்குத் தோன்றுகிறது. அவற்றை எனது சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... நன்றி. சகல மகிமையும் நம் ராஜா ஒருவருக்கே உண்டாவதாக” (எலிசபெத்)
