• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 6 மார்ச் 2023

அன்பரே, ஆண்டவரைப் பொறுத்தவரை எதுவும் தாமதமாகிவிடவில்லை!

வெளியீட்டு தேதி 6 மார்ச் 2023

பல ஆண்டுகளுக்கு முன்பு இளம் போதகராக இருந்த நான், போதகர் ஓழுங்குமுறைக்கு எதிரான விஷயத்தை விரைவாகக் கண்டுபிடித்தேன். துரதிர்ஷ்டவசமாக, நான் வாழ்ந்த பகுதியில், கிறிஸ்தவர்களிடையே பல சண்டைகள், பிளவுகள் மற்றும் அதிகார மோதல்கள் இருந்தன. இது சில சமயங்களில் கொடூரமானதாக இருந்தது... இந்த உண்மையைக் கண்டதும், நான் கலக்கமடைந்தேன்.

ஆண்டவருடைய ஆசையை பாழாக்காமல் தடுக்கவும், அவர் நமக்குள் வைத்திருக்கும் இலட்சியத்தை விரிவாக்கவும், "Givors" என்ற இடத்தில் ஜெபக்கூடுகைகளை ஆரம்பித்தோம். ரோமில் இரகசியமாக பாதாள அறைகளில் கூடிய முதல் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் விதமாக இந்த ஜெப குழுவிற்கு "Catacombs", அதாவது 'பாதாளக் கல்லறை' என்று பெயரிட்டோம்.

இவ்வாறு, நாங்கள் வெவ்வேறு நகரங்களில் உள்ள பல திருச்சபைத் தலைவர்களுடன் ஒன்றாகக் கூடி, ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உபவாசத்திலும் ஜெபத்திலும் நாட்களைக் கழித்தோம், பரிசுத்த ஆவியானவர் எங்கள் வாழ்வில் வெளிப்பட அனுமதித்தோம். எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை, வேறே எந்த வேலையும் இல்லை... இயேசுவுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருந்தோம். தீர்க்கதரிசன வார்த்தைகளும் அடிக்கடி கொடுக்கப்பட்டன. இந்த வார்த்தைகளில் பல என் வாழ்க்கையில் நடந்ததை நான் பார்த்தேன். தீர்க்கதரிசனங்களை வெறுக்க வேண்டாம் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது, அதே பத்தியில், எப்பொழுதும் சந்தோஷப்படவும், இடைவிடாமல் ஜெபிக்கவும், பரிசுத்த ஆவியின் அக்கினியை தனிய விடாமல் இருக்கவும் நம்மை அறிவுறுத்துகிறது. தேவனைத் தேடுவதற்கும், ஆவிக்குரிய வரங்கள் மூலம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்கும் நேரம் ஒதுக்க முடிவு செய்த இந்த சகோதரர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். அவர்கள் இல்லாமல், நான் இன்று இருக்கும் இந்த இடத்தில் இருக்கவே முடியாது. நான் தோல்வியில் மூழ்கிப்போயிருப்பேன்!

ஒருவேளை நீ கடினமான நேரங்களை எதிர்கொண்டு வரலாம், ஏமாற்றம், சந்தேகம், சோதனைகள் போன்றவற்றை சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்" (மத்தேயு 12:20). ஆண்டவர் உன் பக்கத்தில் இருக்கிறார்; அவர் ஒருபோதும் பிசாசு உன்னை பயமுறுத்த அனுமதிக்க மாட்டார்.  ஜெபிக்க ஆரம்பித்துவிடு!

"தரிசனத்தை நாசம்பண்ணுகிறவர்கள்" உன்னை அழிக்க இடங்கொடாதே, அன்பரே. மாறாக, ஆண்டவர் உன் வாழ்க்கைக்கான அவரது தரிசனத்தை புதுப்பிக்கவும், உயிர்த்தெழுப்பவும் அனுமதி. இன்னும் தாமதமாகவில்லை! ஆண்டவருக்கு, ஒருபோதும் கால தாமதம் என்பதே இல்லை. மேலும் இன்று உன்னை ஆசீர்வதிக்க அவர் ஆக்கப்பூர்வமான, புதிய வழிகளைப் பயன்படுத்தலாம்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.