வெளியீட்டு தேதி 23 செப்டெம்பர் 2024

ஆண்டவர் அறிவித்ததை யாராலும் தடுக்க முடியாது!

வெளியீட்டு தேதி 23 செப்டெம்பர் 2024

இன்று, எரேமியா 29:11ஐப் பற்றிய நமது வேத தியானத்தைத் தொடர்கிறோம்.

வேதாகமம் கூறுகிறது: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11)

இந்தப் பாடத்தின் வார்த்தைகள் உன் இருதயத்தைத் தொடும்படி இன்று இதைத் தியானிப்பாயாக.

“அன்பரே, என் மகனே/ மகளே,உன் வாழ்க்கைக்கான திட்டம் என்னிடம் உள்ளது.நான் பேசியவை,நான் உனக்கு அளித்த வாக்குத்தத்தங்கள்,உனக்காக நான் அறிவித்த தரிசனங்கள்,உன்னைப் பற்றி நான் சொன்னவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்.ஆம், உனக்காக எல்லாவற்றையும் நான் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளேன்.துன்பம், நோய், பொருளாதாரத் தேவை இவற்றின் வழியாகநீ கடந்து செல்வதற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே உனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் அறிவித்ததை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது.உன்னால் முன்னோக்கி செல்ல முடியும்.நான் உன்னைக் கைவிடமாட்டேன்.முடிவுபரியந்தம் நான் உன்னுடன் சேர்ந்து நடப்பேன்.நான் உன்னை விட ஒரு படி முன்னே இருக்கிறேன். நான் உனக்கு முன் செல்கிறேன்.நீ செல்லவிருக்கும் பாதையில்... நான் ஏற்கனவே நடந்து விட்டேன்.நான் எல்லா மலைகளையும் தகர்த்து சமன் செய்தேன்; எல்லா தடைகளையும் மேற்கொண்டேன்.நீ என்னை நம்பலாம்."(எரேமியா 29:11) அன்பரே, இதை நீ முழுமையாக உணர வேண்டும் என்பதே இன்று உனக்கான எனது ஜெபமாகும்: ஆண்டவர் சொன்னதை யாராலும் தடுக்க முடியாது. நாம் சிறிது நேரம் ஜெபித்து, ஆண்டவர் உனக்குள் கிரியை செய்து, செயல்படும்படி அறிக்கையிடுவோமா?

“பிதாவே, நான் உம்முடைய பிள்ளையாய் இருப்பதால் நன்றி! என் ஜீவன் உம்முடையது, நான் உம்மில் விலையேறப்பெற்ற நபராய் இருக்கிறேன். என் வாழ்க்கைக்கான உமது பரிபூரண திட்டம் நிறைவேறியதற்கு நன்றி! என்னுடைய வளர்ச்சிக்கும், என் வாழ்வில் உமது சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் ஏற்ப சகலமும் ஒத்துப்போகிறது என்று நான் நம்புகிறேன். ஆம், நீர் உம் வார்த்தையினால் சொன்ன அனைத்தையும், உம் கரங்களினால் நிறைவேற்றுகிறீர். நீர் அறிவித்ததை யாராலும் தடுக்க முடியாது என்று விசுவாசிக்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்திகள் ஆண்டவருடைய வாக்குத்தத்தம் எவ்வளவு அற்புதமானவை என்பதை அறிந்துகொள்ள என் மனதை விழிப்புறச் செய்கின்றன. உங்கள் உதவிக்கு நன்றி.” (ஏஞ்சலின், தருமபுரி)

Eric Célérier
எழுத்தாளர்