• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 23 டிசம்பர் 2022

ஆண்டவர் உங்களிடம் எப்படி பேசுவார்?

வெளியீட்டு தேதி 23 டிசம்பர் 2022

ஆண்டவர் நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார். சிலரிடம், இயற்க்கை வழியாக பேசுகிறார், ரோமர் திருமுகத்தில் எழுதியிருப்பதைப் போல, "எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." (ரோமர் 1:20)

சிலருடன், தங்கள் சிந்தனையின் வழியாக பேசுகிறார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” (யோவான் 10:27).

இன்னும் சிலருக்கு, இயற்க்கைக்கு அப்பாற்பட்ட தன்னுடைய தெய்வ ராஜ்யத்தில் உள்ளவைகளை வெளிப்படுத்துகிறார், சகரியாவிற்கு வெளிப்படுத்தியதைப் போல: "தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:13)

உங்களிடம் ஆண்டவர் எப்படி பேசுகிறார்? இந்தத் திருவருகை காலத்தில், நான் இன்னும் தெளிவாக அவர் பேசுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.

உலக ஊடகங்கள் உள்நாட்டு அமைதியின்மை, போர் மற்றும் COVID-19 வைரஸால் ஏற்படும் இடையூறுகளையும் இழப்புகளையும் பற்றி இடைவிடாது பேசுகின்றன.

வர்த்தக நிறுவனங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடியது என்று சொல்லி பல புதியவகை அழகு சாதனங்கள் அல்லது கேஜெட்டுகளை காட்டி அதை வாங்குவதற்கு உங்களை தூண்டுகின்றனர், ஆனால் நம் மனதின் ஆழத்தில், அவர்கள் சொல்வது உண்மையல்ல என்பதை நாம் அறிவோம். நம் வாழ்க்கையை உண்மையிலேயே மாற்றுவதற்கு நிச்சயமாக இன்னும் அதிகம் தேவை. 

உங்கள் வாழ்க்கை, உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் தொழில் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு இன்னும் அதிகம் வேண்டுமா? ஆண்டவரிடம் இருந்து உங்களுக்கு இன்னும் அதிகம் வேண்டுமா? ஆண்டவர் உங்களிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறாரா?

கிறிஸ்துமஸ் கதையை என் காலை நேர ஜெபவேளையில் படித்துக்கொண்டிருந்தபோது, யோசேப்பின் கதையை மீண்டும் ஒருமுறை கடந்து சென்றேன். கனவுகளின் மூலமாக மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டான்.

முதலாவது கனவு: “அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.” (மத்தேயு 1:20)

இரண்டாவது கனவு: “அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.” (மத்தேயு 2:13)

மூன்றாவது கனவு: “ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்.” (மத்தேயு 2:19-20)

ஆண்டவர் யோசேப்பிடம் கனவுகளின் மூலமாக பேசத் தேர்ந்து கொண்டார். இது எவ்வளவு அருமையாக இருக்கிறதல்லவா?

ஆண்டவர் உங்களுடன் பேச எப்போதும் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்று நாம் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆண்டவருடைய மொழியையும் அவர் நம்மை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் வழிகளையும் தெரிந்துகொள்வதுதான். ஆண்டவர் அவருடைய வழிகளையும் அவருடைய சத்தத்தையும் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார் என்று நான் ஜெபிக்கிறேன்.

மோசே இந்த விலைமதிப்பற்ற விஷயத்தை கற்றுக் கொண்டார்: "அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று." (1 இராஜாக்கள் 19:11-12) மோசே ஆண்டவரை காற்றிலோ, நிலஅதிர்விலோ, அக்கினியிலோ காணவில்லை. ஒரு சிறிய மெல்லிய குரலுக்குள் கண்டடைந்தான்.

முன்னெப்போதையும் விட ஆண்டவரின் குரலை தெளிவாக நீங்கள் கேட்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஏனென்றால் நீங்கள் ஒரு அற்புதம்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.