வெளியீட்டு தேதி 27 நவம்பர் 2022

ஆண்டவர் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறார், அன்பரே

வெளியீட்டு தேதி 27 நவம்பர் 2022

வார்த்தைதான் தேவன் என்பது உங்களுக்கு தெரியுமா? வேதம் அப்படிதான் சொல்கிறது..."ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." (யோவான் 1:1)

வார்த்தைதான் தேவன் என்றால், அவர் நம்மிடம் பேச விரும்புகிறார் என்பது உண்மைதான்! ஏதேன் தோட்டத்தில் பாவத்தில் விழுவதற்கு முன்பு, ஆண்டவர் ஆதாமோடும் ஏவாளோடும் அனுதினமும் நடந்தார், பேசினார். ஆண்டவர், இன்றும் அவர் பிள்ளைகளோடு இவ்வாறு இருக்க விரும்புகிறார். அன்பரே!, உங்களுடனும் கூட.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஆண்டவர் உங்களுடன் பேசுவதற்கு விரும்புகிறார். நீங்கள் பேசுவதை கேட்கவும் அவர் மிகுந்த விருப்பத்தோடு காத்திருக்கிறார். அவர் மனதிலிருப்பதை உங்களோடு பேச ஆசைப்படுகிறார். உங்கள்மீது அவர் வைத்துள்ள அன்பைப்பற்றியும் உங்களை சுற்றியிருப்போர் மீது வைத்துள்ள அன்பை பற்றியும் பேச விரும்புகிறார்.

அவர் பேசுவதை கேட்க விரும்புகிறீர்களா? ஆண்டவரோடு தொடர்பிலிருக்க விரும்புகிறீர்களா? உங்கள் இதயம் திறக்கப்படட்டும். உங்கள் ஆவியின் காதுகள் அவர் குரலைக்கேட்ட ஆயத்தமாகட்டும்.  இயேசுவின் மீது உங்கள் எண்ணங்களை பொருத்தி, அவர் உங்களிடம் பேசுவதைக் கேளுங்கள்.

 எனக்கன்பானவரே, ஆண்டவர் உங்களை நேசிக்கிறார், அவர் உங்களுடன் தொடர்புகொள்வதை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்!

Eric Célérier
எழுத்தாளர்