• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 ஜனவரி 2024

ஆண்டவர் உனக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்!

வெளியீட்டு தேதி 5 ஜனவரி 2024

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு இன்று ஒரு அற்புதமான நாள், உன்னுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ள நான் ஆவலாய் இருக்கிறேன். 

பல ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் மிகவும் சவாலான காலத்தை கடந்து சென்றோம். அந்தக் கால கட்டங்களில், நான் ஒரு உள்ளூர் திருச்சபையில் இளைஞர்களுக்கான போதகராக பணி செய்து கொண்டிருந்தேன். அங்கு தொடர்ச்சியான தலைமைத்துவ மாற்றங்களும் பலவித தடைகளும் ஏற்பட்டதன் மூலம், ஆண்டவர் எங்களைப் பதவி விலக அழைக்கிறார் என்று நாங்கள் நம்பினோம். நான் விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை, ஆனால் அதே நேரத்தில், திருச்சபையையும் மாணவர்களையும் மற்றும் சமுதாயத்தையும் நாங்கள் மிகவும் நேசித்ததால் எங்கள் இருதயங்கள் மிகவும் நொறுங்கிப்போயின. வேலை இல்லை என்ற பயத்தினாலும், நிச்சயமற்ற எதிர்காலத்தினாலும், எங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் ஸ்தம்பித்துப்போனதைப் போன்று உணர்ந்தாலும் நாங்கள் கீழ்ப்படிதலோடு பதவி விலகினோம். இவ்வளவு நிச்சயமற்ற எதிர்கால நிலைமை இருந்தபோதிலும், இயேசுவின் உறுதியான அடித்தளம் எங்களுக்கு மிகுந்த சமாதானத்தைக் கொடுத்தது.

நீ எப்போதாவது உன் நம்பிக்கை சறுக்கும் ஒரு நிலப்பரப்பிலும், உன் அடிகள் நிலையற்றதாக இருந்ததாகவும் உணர்ந்த தருணங்கள் உண்டா?

இஸ்ரவேல் மக்கள் அப்படிப்பட்ட ஒரு தருணத்தை நிச்சயமாக எதிர்கொண்டனர். எரேமியா 29:11ல் ஆண்டவர் தம்முடைய சொந்த ஜனங்களுக்கு அளித்த வாக்குத்தத்தம் பலருக்கும் தெரியும். அவ்வசனத்தில் ஆண்டவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் என்னவென்றால்:

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”  (எரேமியா 29:11)

இது மிகவும் அழகான ஒரு வாக்குத்தத்தம், ஆனால் பல வருடங்களாக அந்நிய தேசத்தில் வாழும்படி நாடுகடத்தப்பட்டு சவாலை எதிர்கொண்டு வாழ்ந்த ஒரு கூட்ட ஜனங்களுக்கு இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தது என்பதை நான் அடிக்கடி மறந்துபோய்விடுகிறேன். இஸ்ரவேல் மக்களுக்கு அது எளிதான காலமாக இருக்கவில்லை. அவர்களுக்கென்று ஒரு வீடு கூட இல்லை, அப்படிப்பட்ட நிலையில் நம்பிக்கை வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இப்படிப்பட்ட காலகட்டத்தில், எது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது? தேவன் அவர்கள் பேரில் ஒரு திட்டமும் நோக்கமும் கொண்டிருந்தார் என்று உரைத்த வாக்குத்தத்தம்தான் அவர்களுக்கு ஆறுதலாய் இருந்தது!

நானும் என் மனைவியும் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, ​​எங்களின் கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்திற்கான அநேக கதவுகளைத் திறந்துவிட்டதைக் காணமுடிகிறது, நாங்கள் ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை நம்பாமல் இருந்திருந்தால், ஒருபோதும் இவ்வாறு முடிவெடுத்திருக்க மாட்டோம். சவாலுக்குப் பிறகு வந்த ஆண்டுகளில், உண்மையிலேயே ஆண்டவர் பல வழிகளில் எங்களை அதிசயமாக நடத்தினார்.

இன்றைய சவால்கள் நாளைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தால், நம் நாட்கள் எவ்வளவு வித்தியாசமானதாக திகழும்? ஆண்டவர் எப்போதும் நமக்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், அவர் இப்போதும் உன் நன்மைக்காக  உன் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார்.

நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம். “இயேசுவே, உமது திட்டங்களை நேசித்து அவற்றை நம்புகிறோம். நீர் அளித்த இந்த வாக்குத்தத்தத்தை நாங்கள் பற்றிக்கொள்வதால், நன்மை செய்வதில் சோர்ந்துபோக மாட்டோம். ஆண்டவரே, இன்றைய தினம் ஒரு நினைவாகவும் நாளைய தினம் ஒரு அதிசயத்தைக் காணும் நாளாகவும் இருக்கும் என்பதை அறிந்து விசுவாசத்துடன் அடியெடுத்து வைக்க எங்களுக்கு உதவும். உமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நீர் நிறைவேற்றிக் கொண்டிருப்பதற்காக நன்றி. ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.