வெளியீட்டு தேதி 25 செப்டெம்பர் 2023

அன்பரே, ஆண்டவர் உனக்கு எவ்விதத்தில் நல்லவராய் இருக்கிறார்?

வெளியீட்டு தேதி 25 செப்டெம்பர் 2023

ஆண்டவர் நமக்கு நல்லவராய் இருக்கிறார், நண்பனே/தோழியே, அப்படித்தானே? ஆம், ஆண்டவர் நல்லவர்!

என்னுடன் சேர்ந்து ருசித்துப் பாரு...

  • இன்று காலை மீண்டும் ஒருமுறை சூரியனை உன்மீது உதிக்கச் செய்தார்.
  • அவர் இன்று தம்முடைய சகல இரக்கங்களையும் உனக்காகப் புதுப்பித்துள்ளார் (வேதாகமத்தில் புலம்பல் 3:23 ஐப் பார்க்கவும்). 
  • அவரது சமாதானத்தை நீ முழுமையாக ருசித்து மகிழும்படி இந்த நாளை அவர் உனக்கு முன்பாக வைக்கிறார்.
  • இன்று மீண்டும் ஒருமுறை நீ நேசிக்கிற நபர்களுடன் இருக்கவும் மகிழ்ச்சியாய் இருக்கவும் அவர் உனக்கு உதவுகிறார்.
  • அவர் மூலம் நீ மக்களை நேசிக்கும்படிக்கு, நீ அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் புதுப்பிக்கிறார்.
  • அவர் மறுபடியும், இந்த நாளில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும், உன் அருகிலும் உன்னோடு கூடவும் இருப்பார்.
  • ஆம், மீண்டும் ஒருமுறை, உன் சகல தேவைகளையும் அவர் பூர்த்திசெய்வார். அவருடைய சத்தியம் மகத்தானது!

ஆம், என் நண்பனே/தோழியே, ஆண்டவர் நல்லவர்! அவர் உனக்கு நல்லவராகவே இருக்கிறார்!

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்!” (வேதாகமத்தில் சங்கீதம் 34:8ஐப் பார்க்கவும்) 

கூடுமானால், சில நிமிடங்கள் ஒதுக்கி இந்தப் பாடலைக் கேட்கவும்... நாம் பாடி நம் நல்ல ஆண்டவரை ஒன்றாக இணைந்து ஆராதிப்போம்! 

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “கர்த்தாவே, இவ்வளவு நாட்களாக நீர் எனக்கு நல்லவராகவே இருந்ததை எனக்கு நினைவூட்டியதற்கு மிகவும் நன்றி சொல்கிறேன். நான் ருசித்துப் பார்க்கிறேன்! இன்று உமது நாமம் மகிமைப்படுவதாக! உமது நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமைவதாக!

Eric Célérier
எழுத்தாளர்