அன்பரே, ஆண்டவர் உனக்கு நிழலானவர்...
நீ எப்போதாவது உன் நிழலை பின்பற்றிப்போய் துரத்தியிருக்கிறாயா? நம் நிழல் நம்மை விட வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நகர்வது சாத்தியமில்லை! ஒருவிதத்தில் நமது நிழல்கள் "நம் தோலில் ஒட்டிக்கொள்ளும்" அது நம்மிடமிருந்து பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்.
தேவனுடைய வார்த்தையில் நாம் இதை வாசிக்கிறோம், “வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.” (சங்கீதம் 121:2-5)
அன்பரே, ஆண்டவர் உன் நிழலாயிருக்கிறார்: அவரை உன்னிடமிருந்து பிரிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியாது. நீ எழுந்திருக்கும்போதும் அவர் உன்னுடன் இருக்கிறார். நீ படுக்கும்போதும் அவர் உன்னுடன் இருக்கிறார். நீ ஒருவருடன் பேசும்போதும் அவர் உன்னுடன் தான் இருக்கிறார். (சங்கீதம் 139)
நீ செல்லும் இடமெல்லாம் கர்த்தர் உன்னைப் பின்தொடர்கிறார். அன்பரே, அவரே உன் பாதுகாவலராய் இருக்கிறார். இப்படி உன் ஒவ்வொரு அடியிலும் கவனம் செலுத்தும் கருணையுள்ள ஆண்டவராகிய இவர் உன்னை அவருடைய பிரசன்னத்தால் மூடுகிறார்... நீ ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில்கொள்.
உனக்குத் தெரிந்த வார்த்தைகளில் ஆண்டவரோடு பேசுவதற்கும், அவருக்கு நன்றி தெரிவிப்பதற்கும், அவரைத் துதிப்பதற்கும் இப்போதே ஒருசில நிமிடங்களை ஒதுக்குமாறு உன்னை ஊக்குவிக்கிறேன்.
இன்றைய உரையிலிருந்து நீ பெற்ற ஊக்கத்தை இங்கே கிளிக் செய்து, இந்த அனுபவத்தை மற்றவர்களுடன் நீ ஏன் பகிர்ந்துகொள்ளக்கூடாது? இவ்வாறு செய்யும்போது அவர்களும் உயர்த்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டு, உன்னோடு கூட கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஆண்டவர் மிக அருகில் இருக்கிறார், அவருடைய அன்பு ஒருபோதும் குறையாது என்பதை நினைவூட்டி இந்த மின்னஞ்சலை அனுப்பியதற்கு மிக்க நன்றி. நீங்கள் அனுப்பும் ஊக்கமளிக்கும் மின்னஞ்சலை நான் நாடோறும் பெற விரும்புகிறேன்! ஆண்டவர் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த உங்களைப் போன்றவர்களைப் பயன்படுத்துகிறார். இந்த வாழ்க்கையில் நாம் எதை சந்திக்க நேர்ந்தாலும், எல்லாவற்றின் மத்தியிலும் நமக்கு சமாதானம் கிடைக்கும், ஏனென்றால் இயேசு நம்முடன் இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலக மாட்டார். உன்னதமானவருக்கு அல்லேலூயா. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திற்கு அல்லேலூயா. நாம் அன்பில் நடக்கும்போது தேவ ஆவியானவர் தொடர்ந்து பிரகாசித்து நம் இருதயங்களில் ஆளுகை செய்வார். ஆண்டவர்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!" (நகோமி)
