வெளியீட்டு தேதி 31 ஜனவரி 2024

அன்பரே, ஆண்டவர் உன்னைக் கண்டுபிடிக்கட்டும்!

வெளியீட்டு தேதி 31 ஜனவரி 2024

ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகரின் இந்தக் கதையை நீ கேள்விப்பட்டிருக்கலாம். "நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, ஒளிந்து பிடித்து விளையாட விரும்புவோம். மற்றவர்கள் என்னைக் கண்டுபிடிக்கவில்லை என்பது பிரச்சனை அல்ல. அவர்கள் என்னைத் தேடவில்லை என்பதுதான் பிரச்சனை‌."

அன்பரே, இன்று, உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன், அதாவது நீயும் நானும் ஆண்டவரிடமிருந்து விலகி, மறைவில் ஒளிந்து வாழக் கூடாது என்று சொல்லி ஊக்கப்படுத்த விரும்புகிறேன். மாறாக, அவர் நம்மைக் கண்டுபிடிப்பாராக!

ஏனென்றால், நகைச்சுவை நடிகர் தனது சோகமான கதையில் சொன்னதுபோல் அல்லாமல், ஆண்டவர் நிச்சயமாக உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் உண்மையிலேயே உறுதியுடன் நம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது நிச்சயம்!

"ஆனால் நான் எப்படி ஆண்டவரிடமிருந்து மறைந்துகொள்ள முடியும்?" என்று நீ கேட்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவர்  நம்மைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், நம் எண்ணங்களில் உள்ள மிகச் சிறிய நினைவுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இப்படி இருக்கும்போது, உண்மையில் நாம் எப்படி அவரிடமிருந்து மறைந்திருக்க முடியும்?

உன் உள்ளத்தின் ஆழத்தில் நீ சிந்தித்துக்கொண்டிருப்பதைப் பற்றி ஆண்டவரிடம் சொல்லாதபோது, நீ ஆண்டவரிடம் எதையோ மறைக்கிறாய் என்று நான் நம்புகிறேன். சில நேரங்களில், "இந்தப் பிரச்சனையை எனக்கு நானே தீர்க்க முடியும். நான் ஆண்டவரைத் தொந்தரவு செய்யப் போவதில்லை" என்ற எண்ணமாகிய, இந்தக் குறிப்பிட்ட பொய்யால் நாம் கண்மூடித்தனமாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

அன்பரே, நீ  ஆண்டவரை ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை. மாறாக, அந்த நேரத்தில் நீ இருக்கிற வண்ணமாகவே, உன் உணர்ச்சிகள், எண்ணங்கள், கேள்விகள் ஆகிய எல்லாவற்றோடும், அவரிடம் எதையும் மறைத்துவைக்காமல், நீ அவரை நோக்கித் திரும்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உன் கவலைகள் அனைத்தையும் நீ அவர் மீது வைத்துவிட வேண்டும் என்று காத்திருக்கிறார்.

"அன்பரே, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்." (1 பேதுரு 5:7)  

ஆண்டவர் உன்னை விசாரிக்க விரும்புகிறார். அவரைக் காத்திருக்க வைக்காதே! அவர் உன்னைச் சந்தித்துப் பேச விரும்புகிறார். உன் வாழ்க்கையில் உன்னை பாதித்திருக்கிற சிறிய விஷயங்களைப் பற்றி கூட, அவர் உன்னுடன் உரையாட விரும்புகிறார். தம்மிடம் வருமாறு அவர் உன்னை அழைக்கிறார். இன்று அவர் உன்னைக் கண்டுபிடிக்கட்டும்.  (மத்தேயு 11:28)  

Eric Célérier
எழுத்தாளர்