வெளியீட்டு தேதி 28 செப்டெம்பர் 2023

ஆண்டவர் உன்னோடு பேச விரும்புகிறார், அன்பரே

வெளியீட்டு தேதி 28 செப்டெம்பர் 2023

ஆண்டவர் வார்த்தையாய் இருக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? வேதாகமம் நமக்கு இவ்வாறு சொல்கிறது... “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”  (யோவான் 1:1

ஆண்டவர் வார்த்தையாக இருக்கிறார் என்றால், அவர் பேச விரும்புகிறார் என்பதுதான் அதன் அர்த்தமாகும்!

ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் விழுந்துபோவதற்கு முன், ஆண்டவர் ஒவ்வொரு நாளும் அவர்களோடு சேர்ந்து நடந்தார் மற்றும் அவர்களோடு பேசினார். அவர் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரோடும் அப்படியே நடக்க விரும்புகிறார், அன்பரே இன்றைக்கும் கூட, அவர் உன்னோடு நடக்க விரும்புகிறார்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவர் உன்னோடு பேச விரும்புகிறார். அவர் நீ பேசுவதைக் கேட்க விரும்புகிறார் என்பது உண்மைதான். அதே சமயத்தில், அவர் உன்னோடு பேசவும், தம்முடைய இருதயத்தில் உள்ளவற்றைச் சொல்லவும் விரும்புகிறார். உன் மீதும், உன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பைப் பற்றி உன்னுடன் பேச விரும்புகிறார்.

நீ அவர் பேசுவதைக் கேட்க விரும்புகிறாயா? ஆண்டவருடன் இவ்வாறு உரையாட விரும்புகிறாயா? உன் இருதயத்தை மட்டும் திறந்துகொடு. அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்க கவனமாய் இருக்கும்படி உன் ஆவிக்குரிய செவிகள் உணர்வுள்ளவைகளாக இருக்கட்டும். உன் எண்ணங்களை இயேசுவுக்கு நேராக மட்டுமே திருப்பி, அவர் உன்னிடம் பேசுவதைக் கேட்கும்படி கவனமாய் இரு...

என் நண்பனே/தோழியே, ஆண்டவர் உன்னை நேசிக்கிறார், அவர் உன்னோடு பேச விரும்புகிறார்!

Eric Célérier
எழுத்தாளர்