Publication date 13 நவம்பர் 2024

ஆண்டவர் உன்னை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார்

Publication date 13 நவம்பர் 2024

வாழ்க்கை என்பது பரத்தை நோக்கிய பயணமேயன்றி வேறொன்றுமில்லை... எனவே நாம் இங்கு "உயர்வு மற்றும் தாழ்வு" என்பதைப் பற்றிப் பேசுகிறோம். நாம் அனைவரும், ஒரு கட்டத்தில், பள்ளத்தாக்குகள் வழியாகப் பயணம்பண்ணுகிறோம், மலையின் உச்சியை அடைவதற்கு முன் ஒருசில மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதை நீ எப்போதாவது கவனித்திருக்கிறாயா? இந்தத் "தாழ்வான பகுதிகள்" தவிர்க்க முடியாதவை, ஆனால் நாம் நல்ல துணையோடு அவற்றைக் கடந்துசெல்கிறோம். அதைத்தான் வேதாகமம் இங்கே நமக்கு நினைவூட்டுகிறது: “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; ... நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர் ...” (சங்கீதம் 23:1-4

அன்பரே, உன் பள்ளத்தாக்கு என்ன? அது தீராத நோயா அல்லது துன்பமா? பொருளாதார நெருக்கடியா, கடன்களா? அல்லது ஒருவேளை சோகம் மற்றும் தனிமையா? அல்லது குடும்பப் பிரச்சனையா, நிராகரிப்பு உணர்வா?

பள்ளத்தாக்கில் உள்ள இருளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உன் இரட்சகர் உன்னோடு வருவதால் எந்தத் தீமைக்கும் பயப்படாமல் நீ அதைக் கடந்து செல்லப்போகிறாய். இன்று அவர் உனக்கு உறுதியளிக்கட்டும், அவருடைய எல்லா வார்த்தைகளையும் விசுவாசத்துடன் ஏற்றுக்கொள்:

  • “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உன்னுடனேகூட இருக்கிறேன்". (மத்தேயு 28:20
  • "... அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்." (எரேமியா 31:3) 
  • நான் உன் பெலன்; நான் உன் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் உன்னை நடக்கப்பண்ணுவேன் (ஆபகூக் 3:19).
  • நான் உன்னைக் கவனித்துக்கொள்கிறேன்... உன்னை என் கரங்களில் சுமக்கிறேன்.  (ஏசாயா 40:11
  • வேட்டையாடுபவர்களிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் நான் உன்னைக் காக்கிறேன் (சங்கீதம் 91:1-2). 
  • நான் உன்னைக் கைவிடமாட்டேன்... என்னைப் பற்றிக்கொள். (யோசுவா 1:5
  • உன் முகத்தில் வழியும் ஒவ்வொரு கண்ணீரையும் துடைக்கிறேன்... உனக்கு ஆறுதல் கூறுகிறேன்; உன் காயங்களைக் கட்டுகிறேன்.  (வெளிப்படுத்தின விசேஷம் 21:4

பள்ளத்தாக்கிற்கு அப்பால், ஆண்டவர் உனக்காகப் புதிய திட்டங்களையும், புதிய வெற்றிகளையும், புதிய எல்லைகளையும் வைத்துள்ளார்.

பள்ளத்தாக்கின் வழியாக ஏறுகையில், உன் முதுகு குனிந்திருக்கும்போது, ​​நீ எதையும் காண முடிவதில்லை என்பது உண்மைதான். ஆனால் ஆண்டவர் நல்ல மேய்ப்பன் என்பதை நினைவில்வைத்துக்கொள். அவருடைய கோலும் தடியும் உனக்கு ஆறுதல் அளிக்கின்றன. நீ நிற்கும் இடத்திலிருந்து தொடுவானங்களைப் பார்க்க மீண்டும் உன் தலையை உயர்த்துமாறு அவர் உன்னை அழைக்கிறார்.

ஆண்டவர் உன்னை பள்ளத்தாக்கிலிருந்து அழகான சிகரங்களுக்கு இயேசுவின் நாமத்தில் விரைவில் அழைத்துச் செல்வார் என்று விசுவாசி!

நல்ல மேய்ப்பனின் துணையோடு இது உனக்கு ஒரு அற்புதமான நாளாக அமைவதாக. 

Eric Célérier
Author