அன்பரே, ஆண்டவர் உன் நித்தியப் பிதா!
இன்று, இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட இந்த நாமத்தைப் பற்றி நான் சம்பாஷிக்க விரும்புகிறேன்... "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ... நித்திய பிதா, ... என்னப்படும்." (வேதாகமம், ஏசாயா 9:6)
"குமாரன்" மற்றும் "பிதா" என்ற வார்த்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஒரே நபரைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் இந்தத் தீர்க்கதரிசனத்தில் பேசுவது தேவனின் இருதயமாகிய, பிதாவின் இருதயம்தான் என்று நான் நம்புகிறேன். மேலும் அவர் எப்போதும் நமக்கு ஒரு தகப்பனாக (பிதாவாக) இருக்க விரும்புவதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று அவர் விரும்புகிறார். ஆண்டவர் "நித்திய" என்ற வார்த்தையை குறிப்பிட்டுச் சொல்லுவது எனக்குப் பிடித்திருக்கிறது.
ஆண்டவர் உண்மையுள்ளவர் என்பதையும், அவர் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறார் என்பதையும், இது எக்காலத்துக்கும் மாறாது என்பதையும் நீ நினைவில்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அன்பரே, ஆண்டவர் உன் பிதாவாக இருந்தார், இப்போதும் உன் பிதாவாக இருக்கிறார், எப்போதும் உன் பிதாவாக இருப்பார்!
உன் பூரண பிதாவாக, உனக்கு எது நல்லது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். உனக்குத் தேவையானதை அவர் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கொடுப்பார்.
அன்பரே, “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்று வேதாகமம் சொல்கிறது. (வேதாகமத்தில் மத்தேயு 7:11ஐப் பார்க்கவும்)
ஆண்டவர் உனக்கு ஒரு நல்ல பிதாவாக இருக்கிறார்! நன்மையானவைகளை அவரிடம் கேள்!
ஆம், ஆண்டவர் உனக்கு ஒரு நல்ல பிதாவாக இருக்கிறார், அவர் நித்திய நித்தியமாக உனக்குப் பிதாவாக இருப்பார்! இதை எடுத்துரைக்கும் இந்தப் பாடலைக் கேட்டு பயனடைவாயாக.
