• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 22 ஜூன் 2024

ஆண்டவர் எப்போது குணமாக்காதிருக்கிறார்?

வெளியீட்டு தேதி 22 ஜூன் 2024

நானும் எனது நண்பர் ஜீன்-லூக் ட்ராச்சலும் கலந்துரையாடிய தெய்வீக குணப்படுத்துதல் எனும் நமது சிறப்புத் தொடருக்குப் பிறகு,  வாசகர்களிடமிருந்து பல மாறுத்தரங்களையும் கேள்விகளையும் நான் பெற்றேன். உதாரணம்: "ஆண்டவர் குணமாக்காதபோது, நாம் என்ன நினைக்க வேண்டும்?" மிக முக்கியமாக தெய்வீக குணப்படுத்துதல் எனும் இத்தலைப்பு, நோயால் அவதிப்படுபவர்களுக்குத்  தெளிவுபடுத்தலைக் கொண்டுவரும் என்று நம்பி இப்பதிலை நான் எழுதினேன்.

நம் ஆண்டவர் குணப்படுத்தும் ஆண்டவர் என்று நான் 100% நம்புகிறேன். அவர் மாறிவிடவில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். (எபிரேயர் 13:8

அவர் ராஜரீகமுள்ளவர் என்று நான் நம்புகிறேன். பூமியில் உள்ள அனைத்து நோய்வாய்ப்பட்டவர்களையும் குணப்படுத்துவதாக ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணவில்லை. எனவே சிலரை ஆண்டவர் மற்றவர்களை விட குறைவாக நேசிக்கிறார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. குணமடைய வேண்டி ஜெபிப்பதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமா? இல்லை, முற்றிலும் நிறுத்தக் கூடாது! அதே நேரத்தில் ஆண்டவர், அன்பும் சர்வவல்லமையும் உடையவர் என்பதை அறிந்து, விசுவாசத்தோடு ஜெபிக்கவும் கேட்கவும் வேதம்  நம்மை ஊக்குவிக்கிறது.

இதோ, ஒரு வாசகரிடமிருந்து வந்த சாட்சி: "நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன், ஆண்டவரின் திட்டத்தில் இருக்கிறேன். என் பார்வை இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ளது. என் நம்பிக்கையும், என் உதவியும், என் பற்றுறுதியும் அவர் மீது இருக்கிறது. அவர் என்னைக் கைவிட மாட்டார், என்னை விட்டு விலகவும் மாட்டார்.  பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்குகிறது. ஆண்டவரே, நீர் உண்மையுள்ளவராய் இருப்பதால் உமக்கு நன்றி."

நீ இப்போது வியாதி எனும் பள்ளத்தாக்கு வழியாகச் சென்றுகொண்டிருக்கிறாய் என்றாலும், ஆண்டவர் உன்னைக் கைவிடமாட்டார் என்பதில் உறுதியாக இருப்பாயாக.  அவர் சாதகமான நேரங்களிலும் மற்றும் சாதகமற்ற நேரங்களிலும், வியாதிப்படும்போதும் ஆரோக்கியமான நேரங்களிலும் உன் அருகில் இருக்கிறார். அவர் உன்னைத் தாங்குகிறார். (இந்த வசனங்களை வாசிக்கும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன்: மத்தேயு 28:20, சங்கீதம் 54:4, சங்கீதம் 27:1, சங்கீதம் 46:1, ஏசாயா 44:2)    

இறுதியாக, ஒவ்வொரு விசுவாசிக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற குணப்படுத்துதலின் அதிசயமாகிய, இரட்சிப்பின் அற்புதம், பாவ மன்னிப்பு, துக்கம், கண்ணீர், நோய் அல்லது மரணம் இல்லாத நித்திய வாழ்வை அடையும் வாக்குத்தத்தத்தை ஆண்டவர் அளித்துள்ளார். இதைத்தான் வெளிப்படுத்துதல் 21:4-ல் வாசிக்கிறோம்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது."  

காத்திருக்கும் இந்நேரத்தில் அன்பரே, கர்த்தருடன் உன் ஐக்கியத்தை வளர்த்துக்கொள்ளவும், அவரில் நிலைத்திருக்கவும், அவருடைய வார்த்தையை வாசித்து அறிக்கையிடவும் உன்னை ஊக்குவிக்கிறேன், ஏனென்றால் அவரே உன் வாழ்வின் ஆதாரம்! இறுதியில் மிகவும் முக்கியமானது: ஆண்டவருடனான நமது தினசரி, ஆழமான உறவு மற்றும் நேர்மையான உறவு! இந்த உறவின் மூலம் அவரது ஆசீர்வாதம் நமக்குக் கிட்டும், அது குணமாக்கவல்லது, அதேசமயம், சோதனையில் விடாமுயற்சியுடன் இருப்பதற்கான பலமாகவும் அது இருக்கும். ஆண்டவர் உன்னைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக!

நீ வியாதி அல்லது நாட்பட்ட நோயின் பள்ளத்தாக்கு வழியாகச் செல்கிறாய் என்றால், இந்த அழகான ஊக்கமளிக்கும் பாடலைக் கேட்கும்படி உன்னை ஊக்குவிக்கிறேன். நோயினால் வந்த ஏமாற்றத்தையும் தனிமையையும் ஆண்டவர் நீக்குகிறார்! இன்று ஊக்கம் பெற்று, உற்சாகமாக இரு.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.