வெளியீட்டு தேதி 4 பிப்ரவரி 2024

இதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்…

வெளியீட்டு தேதி 4 பிப்ரவரி 2024

ஆண்டவர் எனக்குச் செவி கொடுக்கிறாரா? அவர் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா? இத்தனை சூழ்நிலைகளிலும் ஆண்டவர் எங்கே போனார் என்று உனக்குள் கேள்வி கேட்டு, நீ எப்போதாவது கர்த்தரையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் சந்தேகித்திருக்கிறாயா?

அன்பரே, இன்று, இந்தச் செய்தியை உனக்கான அவருடைய பதிலாகப் பெற்றுக்கொள்:

இவற்றை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்:

  • நான் என் சிங்காசனத்தை விட்டு இறங்கிவந்து, உனக்காக மாட்டுத்தொழுவத்தில் பிறந்தேன்.
  • மகிமை நிறைந்த பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, நான் மாம்சத்தை உனக்காக உடுத்திக்கொண்டேன்.
  • உனக்காக நான் முட்கிரீடம் அணிந்தேன்.
  • உனக்காக அடிகளையும், பரியாசத்தையும், துப்புதலையும், மற்றும் சிலுவையில் ஆணியால் அறையப்படுதலையும் ஏற்றுக்கொண்டேன்.
  • உனக்காக நான் சிலுவையில் மரித்தேன். (வேதாகமத்தில் பிலிப்பியர் 2:8ஐப் பார்க்கவும்)  
  • அன்பின் நிமித்தம் உனக்காக என் ஜீவனையே மனமுவந்து கொடுத்தேன்!

அதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ அதைக் கேள்விப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீ அதை உணர வேண்டும் என்று நான் ஏங்குகிறேன். நான் மரணத்தின் வல்லமையைத்  தோற்கடித்து, உனக்காக நரகத்தின் அதிகாரத்தை உரிந்துகொண்டேன் (கொலோசெயர் 2:15). எனது வெற்றி என்பது அரசியல் அல்ல... அது இராணுவமும் அல்ல...

இது முழு பூமியையும், பிரபஞ்சத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கும் அன்பின் சத்தமாகும்.

இன்று நான் இங்கே இருக்கிறேன்; உனக்கு மிகவும் அருகில் உள்ளேன்.

அன்பரே, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

என் நண்பனே/தோழியே, "சிலுவை அண்டையில்" என்ற இந்த அழகான ஆராதனைப் பாடலைக் கேட்கும்போது இயேசுவின் அன்பு உன் இருதயத்தில் பொழிந்தருளப்படுவதாக!

Eric Célérier
எழுத்தாளர்