வெளியீட்டு தேதி 23 அக்டோபர் 2023

இந்தக் கதை நிச்சயம் உன் ஆர்வத்தைத் தூண்டும்...

வெளியீட்டு தேதி 23 அக்டோபர் 2023

ஒருமுறை, பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு எப்போதும் தாமதமாக வரும் ஒரு சிறுவனின் கதையை நான் வாசித்தேன். ஒரு நாள், அவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்லி, அவனுடைய பெற்றோர் அவனை எச்சரித்தனர்…

ஆனாலும், அவன் எப்போதும் வருவதை விட தாமதமாக வீட்டிற்கு வந்தான். அன்று இரவு உணவின்போது, சிறுவன் தனது உணவு வைக்கப்பட்டிருந்த தட்டைப் பார்த்தான். அவனது தட்டில் ஒரே ஒரு இட்லியும் ஒரு டம்ளர் தண்ணீரும் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில், அவன் தனது தந்தையின் தட்டைப் பார்த்தான், தந்தையின் தட்டில் ருசிகரமான உணவு பதார்த்தங்களும் அவனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு வறுவலும் இருந்தது, அவனது தந்தை அமைதியாக இருந்தார். இதைப் பார்த்த சிறுவன் மனதிற்குள் நொறுங்கிப்போனான்.

தன் மகன் செய்த தவறின் விளைவுகளை அவன் புரிந்துகொள்வதற்காக தந்தை காத்துக்கொண்டிருந்தார், பின்னர் அவர் அமைதியாக சிறுவனின் தட்டை எடுத்து தனக்கு முன் வைத்தார். பல்வேறு ருசிகரமான உணவு பதார்த்தங்களாலும் உருளைக்கிழங்கு வறுவலாலும் நிரப்பப்பட்டிருந்த தனது தட்டை எடுத்து, மகனுக்கு முன்பாக வைத்துவிட்டு, அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். இந்த சிறுவன் வளர்ந்து பெரியவனானான். "அன்று மாலை என் தந்தை செய்த காரியம், ஆண்டவர் எப்படிப்பட்டவராய் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது" என்று இன்று அவன் நினைவுகூருகிறான்.

இந்தக் கதை "மீட்பு" என்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு. மீட்பு என்ற இந்த வார்த்தையானது கிரேக்க வார்த்தையான "அப்போலூட்ரோசிஸ்" என்பதிலிருந்து வந்தது, அதாவது "மீட்பின் விலைக்கிரயத்தை செலுத்திய பின் கிடைக்கும் ஒரு விடுதலை" என்பதுதான் அதன் அர்த்தமாகும்.

இந்தக் கதையில், தந்தை தனது மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, தனது சுவையான உணவை உண்பதைத் தானே மறுத்து அதற்கான விலைக்கிரயத்தைக் கொடுக்கிறார். அதேபோல், நாமும் தொடர்ந்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதால், இயேசு நமது துன்பத்தையும் பாவத்தையும் தம்மீது ஏற்றுக்கொண்டு, தமது சொந்த மகிமையை நமக்குக் கொடுக்கும்படியாக அதை தமக்கு தாமே மறுத்து விலைக்கிரயத்தைச் செலுத்தினார். (வேதாகமத்தில் ரோமர் 3 : 23-24ஐ வாசித்துப் பார்க்கவும்)‬ 

அன்பரே, இயேசு உன்னை மிகவும் நேசிக்கிறார், ஆகவே அவர் உன் சகல பாவங்களையும் சுமந்து தீர்த்துவிட்டார்! அதற்குப் பலனாக, தம்முடைய மன்னிப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் நிச்சயத்தை நீ பெற்றிருக்கிறாய்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், இந்த வழியில் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதற்கு நன்றி. இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் நன்றி சொல்கிறேன். என்னுடைய சாட்சி உண்மையில் ஒரு அதிசயத்துடன் தொடங்குகிறது, மேலும் கணக்கிட முடியாத அதிசயங்களால் நிரம்பியுள்ளது! இயேசு என்னைச் சந்தித்தபோது, நான் நீதிமன்றத்தில் 40 வருட சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கான அறிக்கையை எதிர்கொண்டு நின்றுகொண்டிருந்தேன்! தனிமையாக சிறையில் வாழ்வைக்கழிக்க இருந்த எனக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியாக இயேசு ஒரு தூதனை அனுப்பியபோது, சமுதாய மக்கள் என்னை அலைக்கழித்து, என் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் என்னை ஒரு ஓரமாகத் தூக்கி எறியத் தயாராக இருந்தனர். நான் செய்த குற்றங்களுக்காக நான் அங்கு இல்லை (ஒரு நிமிடம் கூட அங்கிருக்க நான் தகுதியானவன் அல்ல) மாறாக, தேவனிடமிருந்து தூரமாக விலகிச் சென்றதால்தான் நான் அங்கு இருக்கிறேன் என்று அந்த தூதன் எனக்கு‌ச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் அங்கே நின்றுகொண்டு, "தானியேல், நீ உன் வேதாகமத்தை வாசித்து ஜெபிக்கக் கற்றுக்கொண்டால், அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்!" என்று சொன்னார். பின்னர் அவர் ராட்சத இரும்புக் கதவு வழியாகத் திரும்பிச் சென்றார்!

இது 1994-ல் நடந்தது, அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது வேதாகமத்தை முன்பக்க அட்டை முதல் பின்பக்க அட்டை வரை முழுவதுமாக வாசித்து வருகிறேன். நான் என் வாழ்க்கையை ஜெபத்திற்காக அர்ப்பணித்திருந்தேன், அது உங்களுக்குத் தெரியுமா,‌ நான் பொய் சொல்லவில்லை. 3 ஆண்டுகளிலேயே, நான் மத்திய சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் ஒருமுறை கூட என் வழக்கை எதிர்த்துப் போராடவில்லை,  என்னை விடுவித்தது அதிசயத்திற்கு மேல் அதிசயம்தான். அந்த சாட்சிக்குள் நூற்றுக்கணக்கான சாட்சிகள் மறைந்துள்ளன. மீண்டும் மீண்டும், இயேசு எனக்குப் பக்கபலமாக இருப்பதைத் தெளிவாகக் காட்டினார். நான் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை, விடுவிக்கப்பட வேண்டும் என்று நான் ஒருபோதும் ஜெபிக்கவுமில்லை, விடுவிக்கப்படுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லாதிருந்தது. ஆனால் நான் அவருடைய மகிழ்ச்சிக்காக சிருஷ்டிக்கப்பட்டேன். நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையை அவருடைய பாதபடியில் வைக்கிறேன், பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்று மன்றாடுகிறேன், அவருடைய சித்தத்திற்கும் வழிகளுக்கும் நான் சரணடைகிறேன். நான் பாவமில்லாதவனாக இருக்கவில்லை, தினமும் மனந்திரும்புகிறேன், இருப்பினும் நான் அப்போது இருந்ததை விட இப்போது மிகவும் வித்தியாசமானவனாக இருக்கிறேன். அவரிடத்தில் உங்களது அர்ப்பணிப்புக்கும், இந்த வாழ்க்கைக்கான அவரது அழைப்புக்கும் நன்றி, நீங்கள் நன்றாக ஊழியம் செய்கிறீர்கள்.”  (தானியேல்)

Eric Célérier
எழுத்தாளர்