• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 1 ஜனவரி 2025

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎆 🎇

வெளியீட்டு தேதி 1 ஜனவரி 2025

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎆 🎇

இந்த புதிய ஆண்டை உன்னோடு சேர்ந்து தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் 🫶🏽  உன் நாளை (வருடத்தை) நீ தொடங்க இருப்பதால், நீ ஆண்டவருடைய வார்த்தையால் ஊக்கமடையும்படி, உன் அதிசயம் மின்னஞ்சலைத் திறந்து வாசிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உன் புத்தாண்டு தீர்மானங்களை இன்னும் நீ எடுக்கவில்லையா? கடந்த சில நாட்களாக, மிகச்சிறந்த தீர்மானங்கள் சிலவற்றை நான் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன், மேலும் சில பரிந்துரைகள் வந்துகொண்டே இருகின்றன, இவை அனைத்தும் நீதிமொழிகளின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. 

இன்று, எந்த தீர்மானம் ஒரு அழகான வாக்குத்தத்தத்துடன் வருகிறது, அதுதான்: கருணைக்கண்ணன்.

  • “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”  (நீதிமொழிகள் 11:24-25)
  • "கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்." (நீதிமொழிகள் 22:9)

ஆண்டவர் எப்போதுமே உதாரத்துவ மனப்பான்மைக்கு பலன் அளிக்கிறார், ஏனென்றால், அவர் உதரத்துவமான ஆண்டவராய் இருக்கிறார். நாம் எவ்வளவு கொடுத்தாலும் ஆண்டவரை விட அதிகமாகக் கொடுத்துவிட முடியாது! சகல விதமான உதாரத்துவ  மனப்பான்மையும் பாக்கியமானதுதான், ஆனால் ஏழைகளுக்கு உதாரத்துவமாக கொடுப்பதுதான் ஆண்டவருடைய கண்களில் விசேஷித்த தயவைப் பெறுகிறது. 

  • "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்." (நீதிமொழிகள் 19:17)  
  • "ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்." (நீதிமொழிகள் 21:13)  

குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டில் வறுமையைப் பற்றி நினைக்கும்போது,​​ பிரச்சனையின் அளவு நம்மை திணரச்செய்யும் அளவிற்கு மிகப் பெரியதாக இருக்கலாம்.  ஒரு ராட்சதனை எதிர்கொள்ளும்போது, இரண்டு விதமான அணுகுமுறைகளுக்கு வாய்ப்பு உண்டு. ஒன்று, "இது மிகவும் பெரியது, என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லலாம்; மற்றொன்று, "இது மிகவும் பெரியது, இந்த வாய்ப்பை நான் தவறவிடக் கூடாது!" என்று சொல்லலாம்.

நமது அழைப்பு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அழைப்பு அல்ல; மாறாக, நம்மிடம் உள்ளதைக் கொண்டு கீழ்ப்படியவும் உதாரத்துவமாக இருக்கவுமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அன்பரே, நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “பரலோகப் பிதாவே, நீர் உதரத்துவமுள்ள ஆண்டவராக இருப்பதற்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலான மிகப் பெரிய, பரிசை உதாரத்துவமாக எங்களுக்குத் தந்திருக்கிறீர்: உமது குமாரனான இயேசுவின் மரணத்தின் மூலம் எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கி இருக்கிறீர். இன்று உதாரத்துவ மனப்பான்மையுள்ள நபராய் வாழ்வதன் மூலம் நீர் காட்டிய முன்மாதிரியைப் பின்பற்ற அன்பரே க்கு உதவுவீராக. ஆமென்”

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.