இன்றைய மதிய உணவிற்கு என்ன சமைக்கலாம் என்று நீ திட்டமிட்டுள்ளாய்? 🍕🍎🍚
ஆண்டவர் நம்மை மிகவும் நேசிப்பதால், நாம் அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாய் இருக்கிறது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு, தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தபோது, “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்” என்றார். (லூக்கா 11:3) 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட இந்த அறிவுரை எப்பொழுதும் போலவே இப்போதும் பொருந்துகிறது!
அன்பரே, நேற்று மாலை, எஞ்சிய புளித்த மாவைக்கொண்டு உனக்கு (ஆவிக்குரிய ரீதியாக) உணவளிக்க முயலாதே. உன் ஆத்துமாவை முழுமையாக புதுப்பித்து, புத்துணர்வு அளிக்கும் புதிய உணவை இயேசு இன்று உனக்காக வைத்திருக்கிறார்!
- ஒவ்வொரு நாளும், ஆண்டவர் உனக்காக ஒரு புதிய வார்த்தையை வைத்திருக்கிறார்.
- ஒரு சிக்கலான சூழ்நிலையில் தெளிவான ஆலோசனையை அருளுவார்.
- மனிதனால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனைக்குத் தெய்வீகமான தீர்வை வைத்திருக்கிறார்.
உன் மீதான அவரது அன்பு மிகவும் பெரியது: ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஆண்டவர் எப்போதும் ஒரு "புதிய" மற்றும் சரியான தீர்வைக் கொண்டிருக்கிறார். நீ உன் இதயத்தைத் திறந்தால், அவர் இன்று உன்னுடன் மீண்டும் பேசுவார். அது, ஒரு பாதை உனக்காகத் திறக்கப்படுவதன் மூலமாகவோ, ஒரு உரையாடலின் மூலமாகவோ அல்லது நீ வாசிக்கும் ஒரு வாசகத்தின் மூலமாகவோ அவருடைய “மன்னா”வை நீ கண்டுபிடிக்க ஏதுவுண்டாகும்.
அன்பரே, உன் பரலோகத் தகப்பனின் புதிய, ஊக்கமளிக்கும் வார்த்தை மூலம், அவர் இன்று உன் அனுதின ஆகாரத்தை உனக்குக் கொடுக்கிறார்!
