வெளியீட்டு தேதி 17 பிப்ரவரி 2023
அன்பரே, இன்று ஆண்டவரிடத்தில் நீ என்ன கேட்கப் போகிறாய்?
வெளியீட்டு தேதி 17 பிப்ரவரி 2023
இன்று, ஒரு பாரம்பரிய துறவியின் இந்த அழகான ஜெபத்தை உற்று கவனிக்க உன்னை அழைக்கிறேன்... 'அனுதினமும் ஒரு அதிசயம்’ எனும் தினசரி ஊக்கத்தைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் ஒருவரான எலிசபெத் அவர்கள் எனக்கு இதை அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்கிறேன்!
- இந்தப் புதிய நாளின் விடியலில், ஆண்டவரே, நான் உம்மிடம் சமாதானம், ஞானம் மற்றும் வல்லமையைக் கேட்க வருகிறேன்.
- இன்று உலகை நீர் பார்ப்பது போல் நானும் பார்க்க விரும்புகிறேன்.
- ஒவ்வொரு நபரிடமும் உள்ள நல்லதை மட்டுமே பார்க்க எனக்கு உதவுவீராக.
- எல்லா அவதூறுகளுக்கும் என் செவிகளைக் காத்து, அதைப் பற்றிப் பேசாதபடிக்கு என் வாயைப் பாதுகாத்தருளும்.
- ஆசீர்வாதத்தின் எண்ணங்கள் மட்டுமே என் மனதை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
- கர்த்தாவே, இந்த நாள் முழுவதும், என்னைச் சந்திக்கும் அனைவரும் நீர் இருப்பதை உணரவும், உம்மை நான் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவும், நான் இன்முகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க உதவுவீராக.
இந்த நாளில் ஆண்டவருடைய மிகையான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்!
