அன்பரே, இன்று இயேசுவைப் போல இரு
நம் அன்பினாலே நாம் இயேசுவின் சீஷர்கள் என்பதை உலகம் அறிந்துகொள்ளும். (வேதாகமத்தில் யோவான் 13:35 ஐப் பார்க்கவும்)
நம்முடைய அன்புதான் இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மை அனுமதிக்கும்...
- வெறுத்து ஒதுக்குதலோ, உடனடி நியாயத்தீர்ப்புகளோ அல்ல,
- நமது விமர்சனங்கள் அல்ல,
- நமது பாரபட்சங்களும் அல்ல!
உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் ஒரு சூழ்நிலை அல்லது நபரை மதிப்பிடுவது மிகவும் எளிதானது. கிறிஸ்தவர்களாகிய நாம், அப்படிச் செய்வதன்மூலம் எதிரியின் வேலையைச் செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல், நியாயத்தீர்ப்பு மற்றும் விமர்சனம் செய்ய எத்தனிப்பதை நான் அடிக்கடி கவனித்திருக்கிறேன்.
தேவன் உன்னை ஒரு பாதுகாப்பு வழக்கறிஞராக அழைக்கிறார், வழக்குத் தொடரும் வழக்கறிஞராக அல்ல. அவர் உன்னைப் பாதுகாக்க அழைக்கிறார், குற்றம் சாட்ட அல்ல.
சாத்தான் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுகிறவன். இயேசுவைப் பொறுத்தவரை, அவர் பிதாவிடத்தில் நமக்காகப் பரிந்துபேசுகிறவராய் இருக்கிறார். (வேதாகமத்தில் 1 யோவான் 2:1 ஐப் பார்க்கவும்)
இன்று, தற்காப்பு வழக்கறிஞராக இருக்கத் தேர்வு செய். இன்று, இயேசுவைப் போல் இரு!
