வெளியீட்டு தேதி 7 செப்டெம்பர் 2024
அன்பரே, இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை?
வெளியீட்டு தேதி 7 செப்டெம்பர் 2024
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் பற்றிய நமது தொடரின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்; மேலும் இந்த பயணத்தை முடிக்கும் முன், ஆண்டவர் உனக்கும் எனக்கும் அவருடைய வார்த்தையில் கொடுத்துள்ள பல வாக்குத்தத்தங்களை உனக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பது என் இதயத்தின் நோக்கமாக இருக்கிறது.
இன்று உனக்கு என்ன தேவை? உன் தேவை எதுவாக இருந்தாலும் சரி, அதற்குப் பொருந்தும் வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன்:
- உனக்கு ஞானம் தேவையா? அதை ஆண்டவரிடம் கேள்: யாக்கோபு 1:5
- ஆண்டவர் உன் தேவைகளை சந்திக்க வேண்டுமா? இந்த வசனத்தைப் பற்றிக்கொள். பிலிப்பியர் 4:19
- உனக்கு மன்னிப்பு தேவையா? 1 யோவான் 1:9 உனக்கு மன்னிப்பு இருக்கிறது என்று உறுதியளிக்கிறது.
- உனக்கு இன்னும் அதிக சமாதானம் அல்லது பொறுமை தேவையா? கலாத்தியர் 5:22-23 அதை எப்படிப் பெறுவது என்பதைக் காட்டுகிறது.
- உனக்கு பரிபூரண சுகம் தேவையா? உன்னைக் குணப்படுத்துவதாக ஆண்டவர் உறுதியளிக்கிறார்: எரேமியா 30:17
- நீ ஆபத்தான நிலையில் இருப்பதைப் போல் உணர்கிறாயா? ஆண்டவர் உன்னைப் பாதுகாப்பதாக வாக்களிக்கிறார்: சங்கீதம் 91:10
- நீ ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து பயப்படுகிறாயா? ஆண்டவர் உன்னை விடுவிக்கிறார்: சங்கீதம் 34:4
- உனக்கு ஆறுதல் தேவைப்படுகிறதா? வெளிப்படுத்துதல் 21:4 உனக்குள்ள சக்திவாய்ந்த ஊக்கமாகும்.
அன்பரே, ஆண்டவர் வாக்குத்தத்தங்களின் ஆண்டவராய் இருக்கிறார்; அவை ஜீவன், சமாதானம் மற்றும் ஜெயத்தை அருளுவதற்கான வாக்குத்தத்தங்கள்! "... அவர் வாக்களித்ததை நிறைவேற்ற வல்லவர்" (ரோமர் 4:21)
ஊக்கமளிக்கும் இந்தப் பாடலைப் பாடி இன்று இவற்றை ஆண்டவரிடம் அறிக்கையிட நான் உன்னை அழைக்கிறேன்.
