வெளியீட்டு தேதி 14 ஜூலை 2024

இன்று, நீ தனிப்பட்ட முறையில் இயேசுவுக்கு ஊழியம் செய்யலாம்!

வெளியீட்டு தேதி 14 ஜூலை 2024

இயேசுவினிடத்தில் நான் விரும்பும் விஷயங்களில் ஒன்று என்னவென்றால், அவர் செய்யும் காரியங்கள் எளிமையானதாகவும், அதே சமயத்தில்   உண்மையானதாகவும் இருப்பதுதான்! நீ எதைச் செய்தாலும், அதை முழு மனதுடன் ஆண்டவருக்காகச் செய்தால், அது நீ கற்பனை செய்வதை விட மிகப் பெரிய பலனைத் தரும்.

இயேசு சொன்னார், "... மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு.  25:40)

இந்தப் பத்தியில், தாகமாயிருப்பவரின் தாகம் தீர்ப்பது, வியாதிப்பட்டவரை விசாரிப்பது, குளிரில் நடுங்குபவர்களுக்கு  உன் வஸ்திரத்தைக் கொடுப்பது போன்ற விஷயங்களை இயேசு குறிப்பிடுகிறார் (மத்தேயு 25:34-40

நாம் மற்றவர்களுக்குச் செய்வதை இயேசு கவனியாதிரார். உண்மையில், அவருடைய நாமத்தில் நாம் அதைச் செய்தால், அதை நேரடியாக அவருக்குச் செய்வது போலாகும் என்று அவர் அறிவிக்கிறார்!

அன்பரே, மற்றவர்கள் மீது நீ காட்டும் பரிவின் அடையாளமாகிய "சின்னச் சின்ன" சைகைகளை அசட்டை பண்ண வேண்டாம். அவைகள் ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவை. ஒரு கிறிஸ்தவராக, நீ அவ்வாறு செய்யும்போது, நீ அதை இயேசுவுக்கே  நேரடியாக செய்வதாகும்! குறிப்பாக, தேவையில் உள்ள ஒரு நபரிடத்தில் நீ இப்படி கவனம் செலுத்தும்போது, ஆண்டவர் தம்மை கனம்பண்ணுவதாக உணர்கிறார்.

அன்பரே, ஒவ்வொரு நாளும், நீ காட்டும் அன்பின் ஒவ்வொரு செய்கைகளுக்காகவும், இன்று நீ செய்து கொண்டிருப்பவைகளுக்காகவும் நன்றி... உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். "அது நான்தான்-நீ எனக்கே செய்தாய்" என்று இயேசு கூறுகிறார்.

Eric Célérier
எழுத்தாளர்