இப்போ நீ என்ன சொன்னாய்? 👂🏽
இன்று, புது வருட கொண்டாட்டத்திற்கு முந்தையநாள், உனக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று நீ நினைக்கிறாயா? நீ தங்கியிருக்கும் இடத்திலோ அல்லது உன் கிராமத்திலோ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகையைக் கொண்டாட விரும்புகிறாயா? நீ தங்கியிருக்கும் இடத்தில் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டைக் கொண்டாடுகிறார்களா?
புதிய வருடத்திலும் இன்னும் சில நாட்களுக்கு நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து புத்தாண்டு தீர்மானங்கள் குறித்த இந்தத் தொடரை நாம் தொடர்ந்து தியானிக்கலாம். இது உன் புதிய வருடத்தை அதிக ஊக்கத்துடன் தொடங்க உன்னைத் தட்டி எழுப்பும் என்று நான் நம்புகிறேன் 💪🏽.
இதோ உனக்கான இன்றைய சவால்: கேட்பதில் சிறந்த நபராக இருப்பதற்குத் தீர்மானி.
கேட்பது என்பது உண்மையிலேயே ஒரு கலை - கேட்பது எளிது என்று தோன்றலாம், ஆனால் அது மிகவும் கடினமானது. நான் கேட்பதில் சிறந்த நபர் என்று என்னைப் பற்றி நினைக்கிறேன், ஆனாலும் நான் யார் சொல்வதைக் கேட்கிறேனோ, அந்த நபர் தான் சொல்ல வருவதை சொல்லி முடிப்பதற்குள், எனது பதிலைத் திட்டமிடுவதை நான் பெரும்பாலும் உணர்ந்திருக்கிறேன். அப்படி என்றால், உண்மையில் நான் ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்கவில்லை என்று தானே அர்த்தம்?
வேதாகமம் இதை புத்தியீனம் என்று அழைக்கிறது:
- "காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்." - நீதிமொழிகள் 18:13
- "மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்." – நீதிமொழிகள் 18:2
- “தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.” – நீதிமொழிகள் 29:20
கவனித்துக் கேட்பது முக்கியமானது; பேசுவதை விட இது மிகவும் முக்கியமானது! கேட்பதற்கு பொறுமையும், சுயக்கட்டுப்பாடும் மற்றும் இரக்கமும் தேவை. நன்றாக கவனித்துக் கேட்கும்போது, அது புரிதல், இரக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றை நமக்குள் பெருகப்பண்ணுகிறது.
மக்களோடு பேசும்போது மட்டும் இது முக்கியமல்ல; ஆண்டவருக்கு செவிசாய்க்க நேரம் ஒதுக்குவது இன்னும் முக்கியமானது! கர்த்தரிடத்தில் உன் ஜெப விண்ணப்பங்கள் அனைத்தையும் பட்டியலிடுவதற்கு முன் (அல்லது அதற்குப் பிறகு), அவருடைய குரலைக் கேட்கவும் சிறிது நேரம் ஒதுக்கு.
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." – நீதிமொழிகள் 3:5-6
அன்பரே, நீ இந்த ஆண்டு கேட்பதில் சிறந்த நபராக இருக்க முயற்சிப்பாயா?
கேட்கும் திறனைப் பற்றிய இந்த அற்புதமான வீடியோவைப் பார்த்துப் பயனடைவாயாக.
