அன்பரே, இயேசுவின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்!
“இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” (வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 3:20ஐப் பார்க்கவும்)
வரவேற்பு அழைப்பிதழில்: "என் சிநேகிதனே, இதோ நான் வாசப்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன்" என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொள்ள நீ என்ன செய்ய வேண்டும்?
- உன் இதயக் கதவை விசாலமாய் திறந்து வை.
- இயேசுவை உன் இதயத்துக்குள் வர அனுமதி.
- அவர் உன் பந்தியில் அமரும்படி அவருக்கு இடங்கொடு.
உலக இரட்சகராய் இருக்கிற, தேவனுடைய குமாரனாகிய இயேசு, உன் வாசல் அருகே நின்று கதவைத் தட்டுகிறார். உன் வசிப்பிடத்தை விசாலமாய்த் திறந்து வை, அவர் உள்ளே வருவார்!
இயேசு தம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து உன்னுடன் பேச விரும்புகிறார். லத்தீஃபாவும், தினாவும் சாட்சி பகருவதுபோல், நீ அதே அப்பத்தைப் புசித்து, அதே கோப்பையில் பருக வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
- “இந்த மின்னஞ்சல்கள் என் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமானதாக இருக்கின்றன, ஏனென்றால், தேவனுடனான எனது ஐக்கியமும், அவருடனான எனது உறவும் உண்மையானது என்பதையும், அவை அர்த்தமுள்ளதாய் இருக்கின்றன என்பதையும் ஒவ்வொரு நாளும் எனக்கு நினைவூட்டுகின்றன. நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாய் இருப்பதும், உன் வாழ்க்கையை ஒரே மெய்யான தேவனுக்கு அர்ப்பணிப்பதும் ஒரு சாதாரண விஷயம் அல்ல!” லதீபா
- “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த தினசரி தியானத்தின் மூலம், இயேசுவின் பிரசன்னம் என் அருகில் இருப்பதை நான் உணர்கிறேன். அவர் என்னை நேசிக்கிறார் என்றும், என் போராட்டங்கள் மத்தியிலும், என் துயரத்தின் மத்தியிலும், என் துக்கத்திலும் அவர் என்னுடன் கூட இருக்கிறார் என்றும் அவருடைய குரல் என்னிடம் சொல்வதைப்போல நான் உணர்கிறேன்." தினா
அன்பரே, இந்த நாள் உன்னதமான தேவனுடைய தோழமையைப் பெறும் ஒரு சிறந்த நாளாக அமைய என் வாழ்த்துக்கள்!
