• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 3 நவம்பர் 2023

அன்பரே, இயேசுவே உனது வழிகாட்டி(GPS)!

வெளியீட்டு தேதி 3 நவம்பர் 2023

என்றாவது ஒருநாள், பழக்கமில்லாத ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டு எப்படி திரும்ப வருவது என்று அறியாமல் வழியை மறந்து, திகைத்து நின்றிருக்கிறாயா?

நண்பர் ஒருவர் என்னிடம் ஒருமுறை தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் ஒரு மலைப் பிரதேசத்திற்கு  ஒரு முறைத் தனியாகச் சென்றிருக்கிறார். அருகில் ஏதாவது அடைக்கலத்தை கண்டுபிடிக்கும்படி, பாறைகளில் வழிகாட்டி குறிகளைத் தேடிக்கொண்டே வெகு தொலைவில் உள்ள மலை உச்சிக்கு வழி தவறிச் சென்றுவிட்டார். 

மாலைப் பொழுது  நெருங்கிக் கொண்டிருந்தது. இருள் சூழத் தொடங்கியது. உடனடியாக மூடுபனி அந்த நிலப்பரப்பை சூழ்ந்துகொண்டது. பனி மூட்டத்தின் நடுவில் அங்குள்ள பாறைகளில் உள்ள வழிகாட்டும் குறிகளைத் தொடர்ந்து சென்று அதிர்ஷ்டவசமாக அவர் சரியான பாதையைக் கண்டு கொண்டார்…

சற்று கற்பனை செய்து பார்... ஒரு நாள் பட்டப்பகலில், அதே மலைப் பிரதேசத்திற்கு மேல் நீ விமானத்தில் சென்றுகொண்டிருக்கிறாய். அந்த நிலப்பரப்பு உனக்கு தெளிவாக தெரிகிறது. இந்த இடத்தில் எப்படி ஒருவரால் பாதை தெரியாமல் தடுமாறி இருக்கக் கூடும் என நீ குழப்பமடையலாம்.

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (வேதாகமத்தில் யோவான் 14:6ஐ பார்க்கவும்)

அன்பரே, இன்று நீ மூடு பனி போன்ற குழப்பமான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறாயா? உனக்கு ஒரு நற்செய்தி கூறுகிறேன்... உயரமான இடத்திலிருந்து இயேசு உன் பிரச்சனைகளைக் காண்கிறார். இன்று நீ அவரை நம்புவாயானால், உனக்கு வழிகாட்ட அவர் போதுமானவராய் இருக்கிறார். இயேசுவே உனக்கு வழியாயிருக்கிறார்! 

என்னோடு கூட சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்: "கர்த்தாவே, நீரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறீர். ஆம் தேவனே நீர் ஒருவரே நான் செல்லும் பாதையை பிரகாசிப்பிக்கிறவராய் இருக்கிறீர். என் முன்னே இருக்கும் பாதையை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றாலும், நீர் என் பாதையைத் தெளிவாய் காண்கிறீர். கர்த்தாவே உமது பிரசன்னத்திற்காகவும் நான் நடக்க வேண்டிய பாதையை எனக்குக் காட்டுவதற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்!"

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "போதைக்கு அடிமையான என் மகனை கடந்த ஜுன் மாதம் இழந்தேன். நான் சிறு வயது முதல் அதிக விசுவாசத்தில் வளர்க்கப்பட்டேன், எனக்கு தேவன் மேல் கோபம் வரவில்லை. ஆனால் இந்த இழப்பு என்னால் தாங்கக் கூடாததாய் இருந்தது. இதனால் ஆலயத்திற்கு செல்வதையும், நண்பர்களோடு பேசுவதையும், மற்ற எல்லா மகிழ்ச்சிகளையும் என் வாழ்விலிருந்து துண்டித்துக் கொண்டேன். ஜெபிப்பதைக் கூட நிறுத்திவிட்டேன். என் மகனை இழந்த சில நாட்களுக்குப் பிறகு, "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற உங்கள் மின்னஞ்சல்களை பெறத் தொடங்கினேன். ஆனால் மற்ற மின்னஞ்சல்களைப் பதிவு செய்ததைப்போல இந்த மின்னஞ்சல்களைப் பெற நான் பதிவு செய்தது போன்று எனக்கு நினைவில்லை. உங்கள் மின்னஞ்சலைத் தான் நான் தினமும் காலையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இயேசுவின் அன்பையும், நம்பிக்கையையும் அதிகமாய் உணர இந்தப் பதிவுகள் எனக்கு உதவுகிறது. என் மகனின் இழப்பிற்கு பிறகு நான் மீண்டும் ஆலயம் செல்லவில்லை, எந்த ஆலயக் குழுக்களோடும் தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் இங்கு, என் சிறிய வீட்டில், அமைதியான இந்த  வாழ்வில், என்னால் மீண்டும் ஜெபிக்க முடிகிறது. எரிக், நீங்கள் உண்மையிலேயே தேவனுடைய நம்பிக்கையும், சமாதானமும் நிறைந்த பாத்திரமாகத் திகழ்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக." (கேத்தரீன், அரியக்குடி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.