வெளியீட்டு தேதி 27 மே 2023

இயேசு எனக்காக பரிந்து பேசுகிறாரா?

வெளியீட்டு தேதி 27 மே 2023

என்னை எப்போதுமே ஆறுதல் படுத்தும் ஒரு சிந்தனை உள்ளது, அது உன்னையும் இன்று ஆழமாக ஊக்குவிக்கும் என்று ஜெபிக்கிறேன். இயேசு எனக்காக பரிந்து பேசுகிறார் என்பதே அந்த சிந்தனை. வேதாகமம் ரோமர் 8:34ல் இதை உறுதி படுத்துகிறது : “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.”

நமக்கு உதவி தேவைப்படும்போது, இயேசு, நம் பொன்னான இரட்சகர், பிதாவின் முன் நின்று நம் சார்பாக மன்றாடுகிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. அவர் நம் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும், குணம்பெறுதலுக்காகவும், தம் முழு உள்ளத்தோடு நமக்காக மன்றாடி வேண்டுதல் செய்கிறார்.

இது எனக்கு மிகவும் ஆறுதலளிப்பதாக உள்ளது, ஏனென்றால் இனி நான் எப்போதும் தனிமையாக இல்லை என்பது ஒரு உறுதி. நான் ஊக்கம்பெற்று பெலத்தோடு இருக்க வேண்டுமென்று, என்னை பாதுகாத்து, ஆசீர்வாதங்களைப் பொழிய, யாரோ ஒருவர் என்னை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர் கண்களிலிருந்து என்னை விலக விடமாட்டார், அவர் எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் கண்ணுக்கு புலப்படாத இடங்கலிருந்து எனக்காக செயல்படுகிறார்…

அவர் இதை உனக்கும் செய்கிறார், அன்பரே...  இயேசு உன்னை பாதுகாக்கிறார், உனக்காக பரிந்து பேசுகிறார். ஆண்டவரின் குமாரன் உன்னை நேசிக்கிறார், இன்றும் உனக்காக இடைவிடாது ஜெபிக்கிறார்.

உன் சார்பாக அவரிடம் இருந்து உதவி வரும் என்ற உறுதியோடிரு, ஏனென்றால் உனக்காக மன்றாடவே அவர் ஜீவித்திருக்கிறார்.

Eric Célérier
எழுத்தாளர்