வெளியீட்டு தேதி 1 டிசம்பர் 2023
இயேசு சர்வவல்லமையுள்ள தேவன்!
வெளியீட்டு தேதி 1 டிசம்பர் 2023
இன்று, வார்த்தையில் நமக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய குமாரனின் நாமங்களை நாம் தொடர்ந்து ஆராய்ந்துபார்க்கப் போகிறோம். "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அவர் நாமம் வல்லமையுள்ள தேவன்... என்னப்படும்." (வேதாகமம், ஏசாயா 9:6)
உன் பலம் மற்றும் பலவீனங்களை தேவன் அறிவார். எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டையைப் பாதுகாப்பதைப்போல, உன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் பத்திரமாய் காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் அறிவார்... அன்பரே, எல்லா நேரத்திலும் உன்னால் பலமுள்ள நபராக இருக்க முடியாது என்பதை அவர் அறிவார், அதனால்தான் அவர் உனக்குப் பலமாகவும், வல்லமையாகவும் இருக்கிறார்.
வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் நீ பலவீனமாக உணர்கிறாய்?
- உன் சரீர பெலத்தை மீட்டெடுக்க ஆண்டவரை நீ நாடுகிறாயா? அவர் உன்னை பெலப்படுத்துவதாக வாக்களிக்கிறார்… “அன்பரே, சோர்ந்துபோகிறவனுக்கு (உனக்கு) அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் (உனக்கு) சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” (வேதாகமம், ஏசாயா 40:29)
- நீ மனதளவில் உற்சாகப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டுமா? ஆண்டவரால் உனக்கு இதைச் செய்ய முடியும்… “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! (வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற அன்பரே), நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (வேதாகமம், மத்தேயு 11:28)
- உன்னுடைய எதிர்காலத்தையும் உன் குழந்தைகளின் எதிர்காலத்தையும் குறித்த பயத்தில் நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாயா? சர்வவல்லமையுள்ள தேவன் உன்னைப் பார்த்து அறிவிக்கிறார், "அன்பரே, உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள் ..." (வேதாகமம், எரேமியா 15:11)
உன் தேவன் சர்வவல்லமையுள்ள தேவன்!
