இயேசு நினைப்பதுபோல் நீயும் நினைத்தால் எப்படி இருக்கும்?
“நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று வேதாகமம் சொல்கிறது. (பிலிப்பியர் 4:6-7)
இப்போது கவலை தன் பலத்தை இழந்துவிட்டது, உன் இதயத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.
வேதாகமம் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23)
நீ வாழும் விதமும் உன் வாழ்க்கையின் போக்கும் உன் இருதயத்திலிருந்து புறப்படுகிறது. கவலைப்பட்டால், நீ பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ ஏதுவுண்டாகும், நாளைய தினத்தைக் குறித்து நிச்சயமற்ற ஒரு நபராய் நீ வாழ நேரிடும். உன் இருதயம் ஆண்டவரை விசுவாசித்தால், அது உன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் விசுவாசத்தை வெளிப்படுத்தும்!
எனவே, கவலையிலிருந்து உனது இருதயத்தை நீ எவ்வாறு பாதுகாப்பாய்? உன் சிந்தைகளை இயேசு கிறிஸ்துவின் மீது வைப்பதன் மூலம் மட்டுமே நீ உன் இதயத்தைக் காத்துக்கொள்ள முடியும்.
பின்வரும் காரியங்களைச் செய்வதன் மூலம், ஆண்டவரைப் பற்றிச் சிந்திக்கவும் அவருடன் சேர்ந்து நடக்கவும் உதவும் இந்த ஆரோக்கியமான பழக்கத்தை நீ கடைப்பிடிக்கலாம்.
- ஆண்டவருடைய வார்த்தையை தினமும் வாசித்தல்,
- ஜெபித்தல்,
- ஆராதனை செய்தல்,
- ஐக்கியங்கொள்ளுதல்.
இவற்றைச் செய்யும்போது, உன் ஆத்துமாவுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்ற பழக்கவழக்கங்களை நீ விட்டுவிடுவாய். உன்னை இரட்சித்தவரை அறிகிற அறிவில் நீ வளர்வாய், அதோடு கூட, அவருடைய கண்களால் இந்த உலகைப் பார்க்க நீ கற்றுக்கொள்வாய்!
அன்பரே, இயேசுவே உனக்கு முன்மாதிரியாக இருக்கிறார். எப்போதாவது அவர் கவலைப்பட்டதை நீ பார்த்ததுண்டா?
இதை நினைவில் வைத்துக்கொள்: சிந்தனையே ஒரு நபரை உயர்த்துகிறது. இயேசு கிறிஸ்துவைப்போல சிந்திப்பது ஒரு நபரை ஆவிக்குரிய விதத்தில் உயர்த்துகிறது.
அவரைப்போல் சிந்தித்தால், நாம் எதற்காகவும் கவலைப்படாமல் இருக்கலாம்! :-)
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: "அன்புள்ள எரிக், இன்று உங்கள் குரலின் மூலம் ஆண்டவர் என்னிடம் பேசினார் என்று நான் நம்புகிறேன். நேற்று எனக்கும் என் கணவருக்கும் இடையே நடந்த சண்டையை என்னால் தீர்க்க முடியவில்லை. ஆனால் இந்தப் புதிய நாள் வந்ததும், நான் எழுந்தேன், இனி எங்கள் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் என் மீது நம்பிக்கை வைக்க முடிவு செய்தேன். உங்கள் செய்தி என் ஜெபத்திற்கு பதில் சொல்வதுபோல் இருந்தது. மிக்க நன்றி. என் ஆண்டவர் அருமையானவர். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக." (சந்திரா)
