இரண்டு வகையான காத்திருத்தல்…
காத்திருப்பதற்கான இரண்டு முறைகள் உண்டு: உற்சாகமாகக் காத்திருத்தல் அல்லது ஊற்சாகமின்றி காத்திருத்தல்.
நாங்கள் எங்களது மகனின் பிறப்புக்காகக் காத்திருந்தபோது, மிகவும் உற்சாகமாகக் காத்திருந்தோம். நாங்கள் வீட்டை ஆயத்தப்படுத்தி, குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் துணிகளை வாங்கினோம், பிரசவத்துக்குப் பின்பு செய்ய வேண்டிய காரியங்களைப் படித்து அறிந்துகொண்டு, குழந்தைக்கான தொட்டிலை அமைத்தோம் மற்றும் மருத்துவமனையில் ஏற்பாடுகளைச் செய்தோம்.
ஆனால் நான் பேருந்திற்காகக் காத்திருக்கும்போது, உற்சாகமின்றி காத்துக்கொண்டிருப்பேன் - வழக்கமாக எனது கைபேசியை மேல்நோக்கி தள்ளுவது அல்லது சில பாடல்களைக் கேட்பது - என என் நேரத்தைக் கழிப்பேன். பேருந்து வருவதற்கு நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை.
அன்பரே, "காத்திருத்தல்" என்று வேதாகமம் கூறும்போது, எந்த வகையான காத்திருப்பைக் குறிக்கிறது என்று நீ நினைக்கிறாய்:
“நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக." – (சங்கீதம் 33:20-22)
'உற்சாகமாகக் காத்திருத்தல்' என்று நீ யூகித்திருந்தால், நீ சொல்வது சரிதான்! 👏🏽
உற்சாகமாகக் காத்திருப்பது ஒரு சிறப்பு விருந்தினருக்காக ஆயத்தமாவதைப் போன்றதாகும்.
நம் வீட்டை எப்படி சுத்திகரித்து ஆயத்தம் பண்ணுகிறோமோ, அதுபோலவே நம் இதயத்தையும் ஆயத்தம்பண்ண முடியும். சிறந்த ஆயத்தம் சிறந்த திட்டமிடல் மூலம் வருகிறது.
அன்பரே, இன்று, நாம் இந்தப் பரபரப்பான காலகட்டத்தில், உற்சாகமாகக் கர்த்தருக்காக காத்திருப்பதையும், நம் இதயங்களை ஆயத்தப்படுத்துவதையும் மறந்துவிடாதபடிக்கு, நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டத்தை செய்வோம். வேதம் வாசிக்கத் தொடங்குவது, வேத தியான நேரத்தை ஒதுக்குவது அல்லது ஜெபம் செய்ய நினைவூட்டிகளை ஏற்படுத்தி வைப்பது போன்றவற்றை உன் திட்டமாக வைத்துக்கொள்ளலாம்.
இந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிப்பதன் மூலம் உன் திட்டத்தை நீ என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உனக்கு விருப்பமா?
