• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 24 நவம்பர் 2022

அன்பரே, உங்களிடம் குறை எதுவுமில்லை!

வெளியீட்டு தேதி 24 நவம்பர் 2022

“நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.” (சுவிசேஷம் நீதிமொழிகள் 14:13)

சோண்டா பியர்ஸ் என்ற ஒரு பெண்மணியை எனக்கு தெரியும். அவர் மேற்கத்திய நாட்டின் ஒரு பிரபலமான நடிகை. விசுவாசமுள்ள இந்த பெண்மணிக்கு பல வருடங்களாக, நீதிமொழிகள் 14:13ல் நாம் படித்ததே அவள் வாழ்க்கை அனுபவமாக இருந்ததது. மதுபானத்திற்கு அடிமையாய் இருந்த அவளுடைய கணவரின் இறப்பு, மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் ஏற்பட்ட கடுமையான நிராகரிப்பு, நடிக்கும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, அவளுடைய இளம் வயதில் தன் சகோதரிகள் இருவரையும் தொலைத்த சோகம், சிறுவயதில் ஏற்பட்ட உள்மனக்காயங்கள், இப்படி இன்னும் அநேகமான வேதனைகளை சுமந்துகொண்டு, வெளிப்புறத்தில் புன்னகையோடு, அவள் உள்ளத்தில் அழுதுகொண்டே நினைத்தாள்…”நான் போதுமானவளா? ஏன் என்னிடம் இத்தனை குறைகள்?”

இன்று உங்கள் வாழ்விலும் இப்படிப்பட்ட போராட்டங்களோ அல்லது வேறுவிதமான துன்பத்திலோ நீங்கள் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் புத்தி, திறமை, கவர்ச்சி, பக்தி, உடல் வலிமை, செயல்திறன், அன்பு, உடல் வாகு அல்லது வேறு ஏதாவது உங்களிடம் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறீர்களா? இன்றைக்கு ஏதேனும் ஒரு விதத்தில் நீங்கள் போதுமானவராக இல்லை என்று நினைத்திருந்தால் அல்லது உங்களிடம் ஏதோ ஒரு குறை உள்ளது என்று நினைத்திருந்தால், ஆண்டவரின் வார்த்தையில் கிடைக்கும் ஆறுதலை பெற்றுக்கொள்ளும்படி உங்களை அழைக்கிறேன். உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட இந்த மாறாத, நித்திய வாக்குறுதிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்:

  • தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் அன்பரே என்கிற உன்னை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது அன்பரேக்கு தந்தருளியுள்ளது (சுவிசேஷம் 2 பேதுரு 1:3)
  • மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் அன்பரே நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (சுவிசேஷம் கொலோசெயர் 2:10
  • ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் (அன்பரே) உண்டாக்குகிறவராயிருக்கிறார். (சுவிசேஷம் பிலிப்பியர் 2:13)

நீங்கள் என்ன செய்திருந்தாலும், எந்த உணர்ச்சியில் இருந்தாலும், வாழ்க்கையில் எதைக்  கடந்துவந்திருந்தாலும், உங்களுக்கு தேவையான அனைத்தும் கிறிஸ்துவை அறிகிற அறிவினால் உங்களுள் நிறைவாக்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு குறையும் இல்லை... ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் முழுமையானவர். ஆதலால் உங்களை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய உங்களுக்கு பெலனுண்டு. (சுவிசேஷம் பிலிப்பியர் 4:13)

நீங்கள் என்றாவது இதை சந்தேகித்தால், இந்த வசனங்களை உங்கள் மேல் அறிக்கையிட அழைக்கிறேன்...ஏனென்றால் இதுவே உங்களை பாதுகாக்கும் சத்தியம்: தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். (சுவிசேஷம், நீதிமொழிகள் 30:5)

சோண்டா சொல்வதுபோல, “கிறிஸ்துவின் ரத்தத்தினால், வாழ்க்கையை கடந்து செல்லவும், அதில் ஏற்படும் எதையும் மேற்கொள்ளவும் நான் போதுமானவளாய் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். அவர் உயிரையும் தருவதற்கு நாம் போதுமானவர்களாகவும் தகுதியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கவே அவர் சிலுவையில் நமக்காக மரித்தார்.”

ஆண்டவரை துதியுங்கள்! வெற்றியோடு கூட இந்த நாளை நீங்கள் கடந்து செல்கையில் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக, அன்பரே!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.