மேடைகள் கவர்ச்சிகரமானவை; தூண்களோ வல்லமை வாய்ந்தவை

உங்கள் மிகப்பெரிய விரக்தி என்ன - உண்மையில் உங்களைத் தொந்தரவு செய்யும் விஷயம் எது? இயேசுவைப் பொறுத்தவரை, பரிசேயர்கள்தான் அவருக்குத் தொந்தரவாக இருந்தனர். அவரது கடுமையான விமர்சன வார்த்தைகள் பரிசேயர்களைக் குறிவைத்தே சொல்லப்பட்டன, ஏனெனில் அவர்கள்: 1. மக்கள் மீது அதிக பாரத்தை சுமத்தினர் மக்களை நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளச் செய்ய, ஒருவாராலும் கடைப்பிடிக்க முடியாத சட்டங்களை ஏற்படுத்தி அவர்கள் மீது அதிக பாரங்களை சுமத்தினர். "சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்." (மத்தேயு 23:4) இதற்கு எதிர்மாறாக, இயேசு தம்மைப் பற்றி இவ்வாறு சொன்னார், "என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது." (மத்தேயு 11:30) 2. மக்களின் கவனத்தைப்பெற ஆவலாய் இருந்தனர்“தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்." (மத்தேயு 23:5-7) ஆனால் இயேசுவோ தம் சீஷர்களுக்கு அதற்கு நேர் எதிராகக் கற்பித்தார்: "அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.” (மத்தேயு 20:25-28) 3. மற்றவர்களைத் தகுதியற்றவர்களாக உணர வைத்தனர்“மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை." (மத்தேயு 23:13) பரிசேயர்கள் தங்களுக்கு முன் நிற்கத் தகுதியற்றவர்கள் என்று கருதும் நபர்களின் நீண்ட பட்டியலை வைத்திருந்தனர்: வரி வசூலிப்பவர்கள், சமாரியர்கள், மதுபானப்பிரியர்கள், விபச்சாரக்காரர்கள் மற்றும் பலர். ஆனால், இயேசுவோ பாவிகளுக்காக வந்தவராய் இருந்தார் (1 தீமோத்தேயு 1:15). "நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்று அவர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். (மாற்கு 16:15). பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர்: சமுதாயத்தின் தூண்களாக இருப்பதற்காகவே இயேசு அவர்களை அழைத்தார்; அதற்குப் பதிலாக, பரிசேயர்கள் அதிகாரத்துக்காகவும் சுயநலத்திற்காகவும் தங்கள் மேடைகளைப் பயன்படுத்திக்கொண்டனர். அன்பரே, ஒரு தளத்தை அல்லது மேடையை வைத்திருப்பது தவறல்ல - ஆனால் உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இன்று சிறிது நேரம் ஒதுக்கி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்: "ஆண்டவரே, தயவுசெய்து, எனது உள்ளார்ந்த நோக்கங்களை எனக்கு வெளிப்படுத்தும். நான் உண்மையிலேயே என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தூணாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க விரும்புகிறேனா? அல்லது மேடையை நாடு என்று சொல்லி எனக்குள் கவர்ந்திழுக்கும் மனதின் சத்தத்தை நான் கேட்கிறேனா? எனக்கு உதவி செய்வீராக, ஆமென்”

