உங்கள் உணர்வுகளை கர்த்தரிடம் மறைக்காதீர்கள்!
இன்று, மனதின் உணர்வு ரீதியிலான ஆரோக்கியம் குறித்த நமது பாடத் தொடரை முடிக்கிறோம். இது உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!
தாவீது தன்னுடைய எழுத்துக்களில் மிகவும் வெளிப்படையானவனாக இருந்தான்... அவன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான் மற்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தன் ஆத்துமாவை வெளிப்படுத்த பயப்படவில்லை, அவன் உண்மையிலேயே எப்படி உணர்கிறான் என்பதை அவரிடம் கூறினான். ஒரு நாள் அவன், "கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ? கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;..” அறிக்கையிட்டான் (வேதாகமம், சங்கீதம் 30: 7-9)
நீ ஆண்டவருடன் யதார்த்தமாக இருக்கும்போதும், உன் உண்மையான உணர்ச்சிகளை அவருடன் யதார்த்தமாகப் பகிர்ந்து கொள்ளும்போதும் அவர் உன்னைப் பாராட்டுகிறார்.
உன் வாழ்க்கையில் குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள் முடியவில்லையா? யாரேனும் உங்களைக் காயப்படுத்துகிறார்களா? அல்லது நீங்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் அவரிடம் சொல்லிவிடுங்கள்.
நீ தொலைந்துபோய்விட்டதாக, கைவிடப்பட்டதாக அல்லது காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்கிறாயா? உன் இருதயத்தை ஆண்டவருக்கு முன் ஊற்றிவிடு. உன் கண்ணீரையும் அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்துவிடு. அவர் நீ பேசுவதைக் கேட்க விரும்புகிறார், உனக்கு மீண்டும் உறுதியளித்து ஆறுதல்படுத்துகிறார்.
அன்பரே, நீ ஆண்டவருக்கு உண்மையாக இருக்க முடியும்... அவரே உன்னுடைய மிகச்சிறந்த நண்பன்!
