உங்கள் தெய்வீக சுடரை இழந்துவிடாதீர்கள்!
நாம் அனைவரும் ஆண்டவரின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளோம். (ஆதியாகமம் 1:27) “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”
ஆதலால், நம் அனைவருக்குள்ளும்... ஒரு தெய்வீக சுடர் உள்ளது.
1995ல் ஒரு UNESCO கருத்தரங்கின்போது, யாரோ ஒருவர் சொன்னது, "மனிதனுக்கு இடையிலான வேறுபாடுகள் இல்லாமல் போனால், ஒவ்வொரு நபரின் அடையாளமும் மறைந்துவிடும். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த தெய்வீக சுடர்தான் பாதுகாக்கப்படவேண்டியது."
உங்களுடைய தெய்வீக சுடரை இழந்துவிடாதீர்கள், அன்பரே! இந்த சுடர்தான் மற்றவர்களை, உங்கள் முன்னிலையில் இருக்கும்போது நலமாக, நிம்மதியாக, சுகமாக, மகிழ்ச்சியாக உணர வைக்கிறது.
இதுதான் உலகை ஆக்கபூர்வமான வழியில் மாற்றக்கூடியது. உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இறைவனின் ஒரு வெளிப்பாட்டை காட்டுவதும் இதுவே!
உங்களின் தெய்வீக சுடரே உங்களை தனித்துவமுள்ளவராக்குகிறது. உங்களை தவிர வேறு யாரும் நீங்கள் செய்வதை செய்யவோ, உங்களை போலவே இருக்கவோ முடியாது. இதனால்தான் நீங்கள் உலகிற்கு தேவை, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே... இந்த உலகிற்கு உங்கள் தெய்வீக சுடர் தேவை.
அவருடைய ஒளியால் பிரகாசியுங்கள், அன்பரே... அப்படி செய்யும்போது, ஆண்டவரைத் தேடுகின்ற மற்றவருடைய வாழ்க்கையில் ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கிறீர்கள்!
