• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 4 மார்ச் 2025

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். – நீதிமொழிகள் 13:4

வெளியீட்டு தேதி 4 மார்ச் 2025

ரூத்தின் கதையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், அது மிகவும் சாதாரணமான ஒரு சம்பவமாக இருந்ததுதான். வாழ்க்கையின் கஷ்டங்களைத் தங்களுக்குத் தெரிந்த சிறந்த முறையில் போராடி எதிர்கொண்ட இரண்டு கடின உழைப்பாளிகளான, விதவைப் பெண்களைப் பற்றியதுதான் இந்தக் கதை.

ரூத்தின் புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது, ஆண்டவருடைய சத்தம் வானத்திலிருந்து இடிமுழக்கம்போல முழங்குவதையோ அல்லது பூமியை உலுக்கும் அற்புதங்கள் நடப்பதையோ உங்களால் பார்க்க முடியாது. ரூத்துக்கு அதிக ஐசுவரியமோ முக்கிய பதவியோ இல்லை; அவள் ஒரு சாதாரண பெண்ணாகத்தான் இருந்தாள், அவள் மனைவியாகவும் மருமகளாகவும், பின்னர் விதவையாகவும், மீண்டும் மனைவியாகவும், இறுதியாக தாயாகவும் மாறினாள்.

ரூத்தின் நாட்கள் தானியங்களைப் பொறுக்குவதிலேயே கழிந்தன (ரூத் 2:2-3,23). 

இது கிட்டத்தட்ட ஒருவரை சலிப்படையச் செய்யும் 🥱. ஆனால் அவளுடைய வாழ்க்கை விசுவாசத்தால் வடிவமைக்கப்பட்டது மற்றும் ஆண்டவரால் வழிநடத்தப்பட்டது.

சில நேரங்களில், நம் வாழ்க்கை சாதாரணமானதாகவோ, ஒரே மாதிரியாகவோ அல்லது சலிப்படையச் செய்வதாகவோ நாம் உணரும்போது, விரக்தி அடைகிறோம்.

என் மனைவி, ஜெனி, ஒரு தாயானபோது, அந்தச் சூழலை எதிர்கொண்டாள். அதன்பின்னர் யெஷுவா ஊழியங்கள் பயணத்தில் அவளால் என்னுடன் சேர்ந்து பயணிக்க முடியவில்லை, குறிப்பாக எங்கள் மகன் நோய்வாய்ப்பட்ட பிறகு, அவளது நாட்கள் பெரும்பாலும், டயப்பர்களை மாற்றுவது மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற சாதாரணமான வேலைகளால் நிறைந்திருந்தது, இப்போதும் கூட பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.

நாம் அனைவரும் மகத்துவம், சாகசம் அல்லது ஆச்சரியமூட்டும் காரியங்களை செய்ய அல்லது அனுபவிக்க விரும்புகிறோம். ஆனால் சாதாரணமான காரியங்களில் கூட வல்லமை இருக்கிறது. நம் வாழ்வின் சாதாரண பகுதிகளின் காரியங்களை நாம் விடாமுயற்சியுடன் செய்யும்போது, ஆண்டவர் நமக்கு பலன் அளிக்கிறார், மேலும் அவர் கடின உழைப்பில் மகிழ்ச்சி அடைகிறார். நீதிமொழிகள் புத்தகத்தில், “சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு” என்றும் "ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்" என்றும் சொல்லப்பட்டுள்ள வசனங்களை நாம் வாசிக்கலாம். (நீதிமொழிகள் 14:23) (நீதிமொழிகள் 13:4)

ரூத்தின் விஷயத்தில், அவளுடைய விடாமுயற்சியும் கடின உழைப்பும் முக்கியமாக அவளது வாழ்க்கைக்குப் பங்களித்தன, அது வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவளுடைய பெயர் இயேசுவின் வம்சவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்பரே, உங்கள் நாட்களை நீங்கள் சாதாரணமான செயல்களைச் செய்வதிலேயே கழித்து, கடந்து செல்லும்போது,​ ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார் என்பதை உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்த முயற்சி செய்யுங்கள், நீங்கள் செய்யும் அனைத்தையும், எவ்வளவு சிறிய வேலையாக இருந்தாலும் சரி, அதை அவருடைய மகிமைக்காக பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து  ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.