• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 மார்ச் 2025

எனக்குத் தயை செய்யும் கண்களை உடைய ஒரு மனிதனைக் கண்டுபிடிக்க உதவுவீராக

வெளியீட்டு தேதி 5 மார்ச் 2025

எனக்குப் பிடித்த ஜெபங்களில் ஒன்று ரூத்தின் புத்தகத்தில் உள்ளது. ஜெனியும் நானும் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு ஜெப வாக்கியம்தான் இது. ஒரு முக்கியமான கூடுகை, அரசாங்க அலுவலகம், வங்கி போன்‌ற இடங்களுக்கோ அல்லது ஒருவரின் உதவியை நாட வேண்டிய மற்ற இடங்களுக்கோ செல்ல நாங்கள் புறப்படும்போதெல்லாம்:  "ஆண்டவரே, எனக்கு தயை செய்யும் கண்களை உடைய ஒரு மனிதனைக் கண்டுபிடிக்க உதவுவீராக" என்று சொல்லி இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறோம்.  ரூத் 2:2ல், கீழே விழுந்த தானியங்களைப் பொறுக்குவதற்காக ரூத் எப்படி வயலைத் தேடிச் செல்கிறாள் என்பதை நாம் வாசிக்கிறோம். யாருடைய பார்வையில் தனக்கு தயவு கிடைக்குமோ அந்த நபரின் வயலுக்குதான் செல்வேன் என்று அவள் நகோமியிடம் கூறுகிறாள். ரூத் போவாஸின் வயலை வந்தடைகிறாள்; தயவு, பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் போஷித்தல் ஆகிய வடிவில் போவாஸ் அவளுக்கு மிகப்பெரிய அளவில் உதவிசெய்கிறான்; இறுதியாக, அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறான் (ரூத் 2-4 வரையுள்ள அதிகாரங்களை வாசிக்கவும்).  

"அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது." (ரூத் 2:10-11

'நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது' என்றும் (ஆதியாகமம் 6:8) 'ஆண்டவரே, உம்முடைய கண்களில் கிருபை கிடைத்ததானால்' என்றும் (ஆதியாகமம் 18:3) சொல்லப்பட்ட  இடங்களில் 'கிருபை' என்பதற்கு பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தைதான் இங்கு ‘தயவு’ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டவருடைய தயவு பெரும்பாலும் மக்கள் மூலமாக கிடைக்கும்.இந்தக் கொள்கையானது எங்கள் வாழ்க்கையில் உண்மையாக நிறைவேறுவதை நானும் ஜெனியும் கண்டிருக்கிறோம். நாங்கள் நினைத்ததை விட அதிகமான வழிகளில் மக்கள் மூலம் ஆண்டவருடைய தயவை அனுபவித்திருக்கிறோம். சில நேரங்களில், பணம், தேவைகள் அல்லது ஒரு திறந்தவாசல் ஆகியவற்றிற்காக ஜெபிப்பதை விட, நன்மைக்காக ஜெபிப்பது அதிக முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.அன்பரே, உங்கள் வாழ்க்கையில் ஆண்டவருடைய தயவு தேவைப்படும் சூழ்நிலைகள் ஏதாவது உண்டா? இன்று நீங்கள் மற்றவர்களுக்கு தயவு காட்ட வேண்டிய வழிகள் ஏதாவது உண்டா?நாம் ஜெபிப்போம்! “பரலோக பிதாவே, இன்று இந்த _________________ சூழ்நிலையில் எங்களுக்கு தயவு காண்பிக்கும் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.