• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 ஜூலை 2024

அன்பரே, உண்மையான வெற்றி எது?

வெளியீட்டு தேதி 11 ஜூலை 2024

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் மலைப்பகுதி ஒன்றில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது, ஆண்டவர் என்னைக் கூப்பிடுவதையும், என் ஆவியில் மீண்டும் மீண்டும் இப்படி ஒரு கேள்வி கேட்பதையும்  நான் உணர்ந்தேன்: "எரிக், நீ இதுவரை எனக்காக செய்தவற்றை வைத்து வெற்றியின் அளவை எப்படிக் கணக்கிடுகிறாய்?" 

நான் சீக்கிரமாக அவருக்கு பதிலளிக்க முற்பட்டு, “இது மிகவும் எளிமையானது... கர்த்தாவே, உமக்கு நேராகத் தங்கள் இருதயத்தைத் திருப்புபவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு நான் வெற்றியை அளவிடுகிறேன். லட்சக்கணக்கான மக்கள் உம்மிடம் வந்தால், எனது பிரயாசத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என அர்த்தம்" என்று சொன்னேன்.

ஆண்டவரிடம் நான் கேட்ட பதில் இதோ:

"இங்கே பார், எரிக், வலைதளத்தின் மூலம் பரவும் சுவிசேஷத்தால் லட்சக்கணக்கான மக்கள் தொடப்படுவது எனக்கு அவ்வளவு முக்கியமல்ல. உலகம் முழுவதும் என் குமாரனை அறிந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய பார்வையில், மக்கள் என்னோடு ஐக்கியங்கொண்டிருப்பதுதான் முக்கியமானது... இவர்கள் என்னுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துகிறார்களா? அதேபோல், எரிக், உன் திட்டங்களைச் செயல்படுத்தும்போது நீ உறவை வளர்த்துக் கொள்கிறாயா?"

இதைக் கேட்டதும், நான் திகைத்துப்போனேன். என்னைப் பொருத்தவரை, நான் உருவாக்கிய இணையதளங்கள் மூலம், நான் "பெரிய" காரியங்களைச் சாதித்திருந்தேன் மற்றும் "அதிக" எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவி செய்திருந்தேன். ஆனால் நான் பெரும்பாலும், உறவுகளை சேதப்படுத்தினேன்; அப்படிச் செய்ததால், மக்களைக் காயப்படுத்தியிருந்தேன் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, நான் பரிசுத்த ஆவியானவரை வருத்தப்படுத்தினேன். நான் என் குறிக்கோளைத் தவறவிட்டேன்…

நம் உலகமானது திட்டங்கள், பலன்கள், செயல்திறன், எண்ணிக்கைகள் மற்றும் பணம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. ஆனால் ஆண்டவரோ, உறவு, அன்பு, இரக்கம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறார். நம் ஆண்டவர் ஜனங்களோடு உறவாடி ஐக்கியங்கொள்ள விரும்புகிறவராய் இருக்கிறார். நாம் அவரைப்போல இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மேலும், அவர் நம்மை சிநேகிதர் என்று அழைக்கிறார்... (யோவான் 15:15)

நாம் வெறுமனே திட்டங்களைத் தீட்டுபவர்களாக மட்டுமல்ல, முதலாவது, ஐக்கியங்கொள்பவர்களாகவும் பாலம் கட்டுபவர்களாகவும் இருக்கவே ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

அன்பரே, மக்கள் மீதான அன்பால் உன் இருதயத்தை நிரப்பும்படி நீ அவரிடம் கேட்க விரும்புகிறாயா? பெரிய காரியங்களைச் செய், மகத்தான சாதனைகளைச் செய், சகல சிருஷ்டிக்கும் நற்செய்தியைப் பிரசங்கி, சகல தேசத்தாரையும் சீஷராக்கு, ஆனால் யோவான் 13:35-ல் இயேசு சொன்னதை மறந்துவிடாதே: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்." 

நட்புறவில் வல்லமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நட்புறவானது கருத்துக்கள் மற்றும் திட்டங்களை விட எப்போதும் உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நட்புறவின் மூலம்தான் நம்மை மற்றவர்களுக்குத்  தெரியப்படுத்த முடியும் மற்றும் நாம் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியும்!

"நான் உங்களை சிநேகிதர் என்று அழைத்தேன்..." என்று இயேசு மிகவும் நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “வணக்கம், எனது துயரமான நேரத்தில் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் ஆண்டவரிடமிருந்து வார்த்தையையும் தேடி இணையத்தில் உலாவியபோது, திரு. எரிக் அவர்களுக்கு நேராக என்னை வழிநடத்தியதற்காக நான் முதலில் ஆண்டவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எனது மின்னஞ்சலைத் திறக்கிறேன்; இது ஆண்டவருடைய வார்த்தையாகும், இது என்னை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது அந்தந்த நாளுக்குத் தேவையான ஊக்கமளிக்கும் வார்த்தையை எப்போதும் சரியான நேரத்தில் அளித்து, அதை உறுதிப்படுத்துகிறது. பெற்றுக்கொண்ட செய்தியைப் படிக்கும்போது, என் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை என்னால் நிறுத்த முடியாது; ஏனென்றால் நான் என்ன செய்கிறேன், அல்லது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் அல்லது ஆண்டவரிடத்தில் நான் என்ன பேசினேன் என்பதற்கு ஏற்ப அந்த வார்த்தைகள் பொருத்தமாய் இருக்கிறது. அதைப் படித்ததும், நான் அழுவேன், பிறகு நான் மனதில் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டு, இவ்வாறு எனக்குத் தேவையான வார்த்தைகளை உறுதிப்படுத்தியதற்கு நான் ஆண்டவருக்கு நன்றி சொல்வேன். திரு எரிக் அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன். பிதாவே, நீர் திரு. எரிக் அவர்களையும் அவருடன் தங்கள் சாட்சிகளைப் பகிர்ந்துகொள்பவர்களையும் மற்றும் அவருடன் தொடர்புகொள்பவர்களையும் தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். உமது வார்த்தை எனக்கு ஒரு அதிசயமாக இருந்திருக்கிறது, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நான் மிகவும் நன்றி சொல்கிறேன்... எனக்காக இருப்பதற்கு  நன்றி!”  (ராபர்ட்)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.