அன்பரே, உண்மையில் உனக்கு என்ன தேவை?
ஒவ்வொரு காலையும் ஒரு புதிய நாளின் ஆரம்பம், மற்றும் சூரியன் உதிக்கும்போது, பரலோக வாய்ப்புகளும் அற்புதங்களும் என் முன் இருக்கின்றன என்ற உண்மையை நான் நினைவில்கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும், தேவன் என்னிலும் என் மூலமாகவும் புதிய காரியத்தைச் செய்ய முடியும். என் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் அவர் என்னைப் பயன்படுத்தக் கூடும். நான் மற்ற எதையும் செய்வதைவிட இதைச் செய்வதை விரும்புகிறேன்!
நிச்சயமாக, கர்த்தருக்குள் நான் செய்யும் ஊழியத்திற்கு நிறுவனக் கட்டமைப்பும் திட்டமிடலும் தேவைதான். செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன... ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக ஆண்டவர் என் வாழ்வின் கர்த்தராய் இருக்கிறார். என் சமாதானம் மற்றும் சந்தோஷத்துக்கான ஆதாரம் அவர் ஒருவரே. (சங்கீதம் 36:7-9) உண்மையில், அவருடைய பிரசன்னம் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் அவசியமானது. அவருடைய பிரசன்னமும், அன்பும், ஜீவனும் என் வாழ்வில் நான் உயர எழும்புவதுக்கான செட்டைகளை எனக்குத் தருகின்றன!
அன்பரே, உனக்குத் தேவையானது அதிக பதில்களோ, அதிக வழிகளோ அல்லது கூடுதல் திட்டங்களோ அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, உன் ஆண்டவர் மட்டுமே உனக்குத் தேவை!
முதலாவது உனக்கு அவர்தான் தேவை! அவர் மிகவும் அற்புதமானவர்! அவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் உன் பக்கத்தில் நிற்கிறார். ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில், அவர் உனக்கு அருகில் இருக்கிறார்.
"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." (சங்கீதம் 130:6)
அவர் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை உனக்கு அளிக்கிறார். இந்த வசனத்தில் உள்ளதைப்போலவே, அவர் தமது அன்பை உனக்கு உறுதிப்படுத்துகிறார்: "... ஆம், அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்..." (எரேமியா 31:3)
தேவ பிரசன்னம் உனக்குப் போதுமானது என்று நீ நம்புகிறாயா? அப்படியானால், இந்த அழகான ஆராதனைப் பாடலைப் பாடி கர்த்தரை உன் வார்த்தைகளாலும், உன் இருதயத்திலிருந்தும் ஆராதிக்க உன்னை அழைக்கிறேன்.
